மணலூர் ஏழுலோகநாயகி அம்மன் கோயில்

மணலூர் ஏழுலோகநாயகி அம்மன் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயிலாகும்.

அமைவிடம்

தொகு

கும்பகோணம்,குத்தாலம் நெடுஞ்சாலையில் காவிரியின் வட கரையில் கஞ்சனூருக்கு மேற்கே 3.கிமீ தொலைவில் உள்ளது.

மூலவர்

தொகு

இக்கோயிலில் மூலவராக ஏழுலோகநாயகி அம்மன் உள்ளார். தீச்சுவாலைகளால் ஆகிய மகுடத்தோடு, சாய்ந்த தலையுடன் எட்டு கரங்களைக் கொண்டு அசுரனை வதம் செய்யும் கோலத்தில் உள்ளார். [1]

சிறப்பு

தொகு

சப்தமாதர்களான பிராமி,மகேஸ்வரி,கௌமாரி, வைஷ்ணவி, வராகி, மகேந்திரி, சாமுண்டி என்ற ஏழு தேவியர்களும் சேர்ந்த உருவமாய் இந்த அம்மன் உள்ளார். [1]

விழா

தொகு

இக்கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. [1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014

வெளி இணைப்புகள்

தொகு