மணல் திட்டுகள்
மணல் திட்டுக்கள் மற்றும் நீண்ட மணல் திட்டுக்கள் ( Spits மற்றும் Bards) என்பவை அலையின் படிவித்தலோடு தொடர்புடைய நிலத்தோற்றங்களுள் ஒன்று. கடல் அலைகளினாலும் நீரோட்டங்களாலும் அரிக்கப்பட்ட மணல் துகள்கள் கடத்தப்படும் போது ஏதேனும் குறுக்கீடுகள் ஏற்படுமாயின் அவ்விடத்திலேயே அத்துகள்கள் படிய வைக்கப்படுகின்றன. இதேபோல மேலும் படியவைத்தல் தொடரும் போது நீண்ட தடுப்பு போலவும் தாவது நாக்கு போன்ற அமைப்பாகவும் கடற்கரையிலிருந்து கடலினை நோக்கி வளர்கின்றன.[1] இது போன்ற அமைப்பு ஆற்று முகத்துவாரத்தில் உருவாகுமேயானால் அது குடா என்று அழைக்கப்படுகிறது.[2]