மணிபாய் தேசாய்

காந்தியவாதி

மணிபாய் தேசாய் (27 ஏப்பிரல் 1920- 1993) என்பவர் காந்தியவாதி, சமூகச் செயற்பாட்டாளர் மற்றும் கிராம வளர்ச்சியில் ஈடுபட்டவர்.

பணிகள்

தொகு

கிராமச் சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தாலும் அறிவியலில் பட்டம் பெற்று இருந்தார். மகாத்மா காந்தியிடம் அன்பு கொண்டு அவரது கொள்கைகளில் நாட்டம் கொண்டார். 1946 ஆம் ஆண்டில் புனே அருகில் உருலி கஞ்சன் என்ற சிற்றூருக்கான முன்னேற்றங்களைச்  செய்யுமாறு மகாத்மா காந்தி, மணிபாய் தேசாயிடம் சொன்னார். அதன்படி மணிபாய் அங்குப் போய் கிராமச்  சேவை செய்தார்.

இயற்கை மருத்துவத்தைப் பரப்ப ஓர் ஆசிரமத்தைத் தொடங்கினார். உருலியில் பள்ளிகளைத் தொடங்கினார். 1967 இல் பெயிப் என்ற பாரதிய வேளாண் தொழில் அறக்கட்டளையைத் தொடங்கினார். இதன் மூலம்  இந்தோ அய்ரோப்பிய கலப்பின கால்நடைகளை அறிமுகப்படுத்தினார். [1]

பெற்ற விருதுகள்

தொகு
  • ஜமன்லால் பஜாஜ் விருது (1983)

சான்றாவணம்

தொகு
  1. http://goodnewsindia.com/Pages/content/institutions/manibhaiDesai/preface.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிபாய்_தேசாய்&oldid=3742866" இலிருந்து மீள்விக்கப்பட்டது