மணிமங்கலம் தர்மேசுவரர் கோயில்

மணிமங்கலம் தர்மேசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் மணிமங்கலம் என்ற ஊரில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம் தொகு

இக்கோயில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் மணிமங்கலம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. முன்னர் இவ்வூர் வேதமங்கலம் என்றழைக்கப்பட்டது.[1] கடல் மட்டத்திலிருந்து சுமார் 47 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 12°54'56.2"N, 80°02'36.6"E (அதாவது, 12.915608°N, 80.043502°E) ஆகும்.

இறைவன், இறைவி தொகு

இக்கோயிலின் மூலவராக தர்மேசுவரர் ஆவார். இறைவி வேதாம்பிகை ஆவார். இக்கோயிலின் தல மரம் சரக்கொன்றை ஆகும். கோயிலின் தீர்த்தம் சிவபுஷ்கரணி ஆகும்.[1]

அமைப்பு தொகு

இறைவன் சன்னதியும், இறைவி சன்னதியும் தனித்தனியாக உள்ளன. லிங்கத் திருமேனியான மூலவர் சதுர வடிவத்தில் உள்ளார். இறைவி நின்ற நிலையில் உள்ளார். சதுர்வேத விநாயகர், பைரவர், சனீசுவரர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், அனுக்கை விநாயகர், சுந்தரர், நாவுக்கரசர், நவக்கிரகங்கள் ஆகியோர் உள்ளனர். விமானம் கஜபிருஷ்ட அமைப்பைச் சேர்ந்தது. மூலவருக்கு முன்னுள்ள நந்தி அழகாக சிற்ப வேலைப்பாட்டுடன் உள்ளது. இக்கோயிலில் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் விநாயகரை வழிபட்ட நிலையில் இங்கு ஒரே வரிசையில் நான்கு விநாயகர்கள் உள்ளனர். திருச்சுற்றின் பின் புறம் இரு திசைகளிலும் இரு விநாயகர்கள் உள்ளனர். முன்பொரு காலத்தில் இப்பகுதியை ஆண்டுவந்த பல்லவ மன்னர் பல தானதருமங்களைச் செய்தான். அப்போது கோயில் கட்டுவது பற்றியும் சிந்தித்தான். அப்போது சிவன் ஒரு அடியார் வேடத்தில் வந்திருந்து தனக்கு தானம் கேட்க, இறைவனே வந்ததை உணர்ந்து கோயிலைக் கட்டினான்.[1]

விழாக்கள் தொகு

ஆடிப்பூரம், நவராத்தி, சிவராத்திரி, மார்கழி திருவாதிரையில் சிறப்பு பூசை, உள்ளிட்ட விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன.[1]

மேற்கோள்கள் தொகு