மணி பவித்ரா
மணி பவித்ரா (Mani Pavitra) இந்தியாவின் தெலுங்கானாவைச் சேர்ந்த ஒரு பல்சீரமைப்பு மருத்துவராவார். வாழ்க்கைத் தரமுயர்த்தும் பயிற்சியாளர், சமூக தொழில் முனைவர், யோகா பயிற்சியாளர் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த உடற் பயிற்சியாளர் என்ற பன்முகங்கொண்டு இவர் இயங்கி வருகிறார். [1] பூர்னா மனித சிறப்பு அறக்கட்டளையின் முன்முயற்சியான மில்லியன் அம்மாக்கள் என்ற அமைப்பின் நிறுவனராகவும் பவித்ரா அறியப்படுகிறார். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை எடுக்க தாய்மார்களுக்கு அதிகாரம் அளிப்பதை மில்லியன் அம்மாக்கள் அமைப்பு தன்னுடைய இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. [2][3]
மணி பவித்ரா Mani Pavitra | |
---|---|
மருத்துவர் மணி பவித்ரா | |
பிறப்பு | ஐதராபாத்து (இந்தியா), தெலங்காணா, இந்தியா |
பணி | பல்சீரமைப்பு மருத்துவர்,யோகா பயிற்சியாளர்,வாழ்க்கைத் தரமுயர்த்தும் பயிற்சியாளர் |
அறியப்படுவது | மில்லியன் அம்மாக்கள் அமைப்பு, பாம்பர்டு மாம்சு மருத்துவமனை |
வாழ்க்கைத் துணை | பிரதீப் யார்லகத்தா |
பிள்ளைகள் | 2 |
ஆரம்பகாலமும் கல்வியும்
தொகுமணி பவித்ரா இந்தியாவின் ஐதராபாத் நகரத்தில் பிறந்தார். [4] மணிப்பாலிலுள்ள மணிப்பால் பல் அறிவியல் கல்லூரியில் தனது இளங்கலை பல் அறுவை சிகிச்சை பாடத்தில் பட்டம் பெற்றார். என்.டி.ஆர் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தில் தங்கப் பதக்கத்துடன் பல்சீரமைப்பு மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். [5] மணிப்பால் பல் அறிவியல் கல்லூரியில் மீண்டும் சீரொளி பல் மருத்துவத்தில் முதுநிலை பட்டயப் படிப்பையும் முடித்தார். [6]
தொழில்
தொகுபல்சீரமைப்பில் தனது முதுநிலை படிப்பை தங்கப் பதக்கத்துடன் மாநிலத்தில் முதலாமவராக முடித்த பின்னர், பவித்ரா ஐதராபாத்தின் கிம்சு மருத்துவமனையில் பல்சீரமைப்பு மருத்துவராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் 2012 ஆம் ஆண்டில் இவர் பல் மருத்துவராக தனது முதல் பல் மருத்துவமனையைத் தொடங்கினார். [7] பல்சீரமைப்பு மருத்துவர் பவித்ரா என்பதைத் தாண்டி பவித்ரா ஒரு தொழில்முனைவராகவும் செயல்படுகிறார். ஆரோக்கியமான பிறப்பு நடைமுறைகளை பரப்புவதற்கும் கர்ப்பிணி தம்பதிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் ஒரு முழுமையான கர்ப்ப பராமரிப்பு மையமான பாம்பர்டு மாம்சு மருத்துவமனையின் இயக்குநர்களில் ஒருவராக உள்ளார்.
குடும்பம்
தொகுபிரதீப்யார்லகத்தா என்பவரை திருமணம் செய்துகொண்ட பவித்ராவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. [8][9]
மில்லியன் அம்மாக்கள்
தொகுமில்லியன் கணக்கான தாய்மார்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் இருக்க ஒரு 21 நாள் உடற்பயிற்சியில் ஈடுபட தாய்மார்களை ஊக்குவிப்பதற்காக மணி பவித்ரா ஏற்பாடு செய்த முகாம் ஒரு முன்னெடுப்பு முயற்சியாகும். [10] ஐதராபாத்தில் நடைபெற்ற விழாவில் இருத்திக் ரோசனின் தாயார் பிங்கி ரோசன் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராகக் கலந்துகொண்டார். [11]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bringing out the wonders in a woman – Dr. Mani Pavitra". Siya women.com. Archived from the original on 2019-04-24. பார்க்கப்பட்ட நாள் 2020-11-16.
- ↑ "Pinky Roshan encourages Hyderabadi moms to take up 21 day fitness challenge". Times of india.
- ↑ hybiz.tv. "WowMom event celebrating Mom entrepreneurship | Million Moms founder Dr Mani Pavitra | hybiz.tv" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2019-08-20. பார்க்கப்பட்ட நாள் 2019-08-20.
- ↑ "Putting Moms first". Deccan Chronicle.
- ↑ "Dentist and Dontist". myhcue.com.
- ↑ "Who are we". Dentistinhyderabad.com. Archived from the original on 2021-01-26. பார்க்கப்பட்ட நாள் 2020-11-16.
- ↑ "Mother of Invention". India Times.
- ↑ "How was pampered Momz Born?". Pampered Momz. Archived from the original on 2019-08-31. பார்க்கப்பட்ட நாள் 2020-11-16.
- ↑ "Mani Pavitra Pampered Moms". BizzTor.
- ↑ "A mother deserves it all". The Hans India.
- ↑ "Pinky Roshan encourages Hyderabadi moms to take up 21 day fitness challenge". Ficci.[தொடர்பிழந்த இணைப்பு]