மண்சோறு சாப்பிடுதல்

(மண்சோறு உண்ணுதல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மண்சோறு சாப்பிடுதல் என்பது இந்து சமயத்தில் மேற்கொள்ளப்படும் ஒரு நேர்த்திக் கடனாகும். [1] பொதுவாக குழந்தை வேண்டியும், கணவன் மற்றும் குடும்பத்தினர் நலனுக்காகவும் இந்த மண்சோறு சாப்பிடும் வழக்கம் உள்ளது.

இந்து சமயக் கடவுள் நம்பிக்கையுடையவர்கள், இறைவனிடம் தங்கள் கோரிக்கை நிறைவேற்றத்தின் போது, கோரிக்கை நிறைவேறினால் செய்வதாக வேண்டிக் கொள்ளும் ஒரு நம்பிக்கை அல்லது ஒரு சடங்கு. இந்த வேண்டுதலுக்குப் பின்பு, கோரிக்கை நிறைவேறியவர்கள், ஒருநாள் அவர்கள் வேண்டிக் கொண்ட கோயிலில் வெறும் தரையில் சோறு போட்டுச் சாப்பிடுகின்றனர்.

திருவண்ணாமலை கோட்டுப்பாக்கம் பரதேசி ஆறுமுகசாமி கோவிலில் குழந்தை வேண்டி மண்சோறினை பெண்கள் உண்கின்றனர். இதற்காக சிவாச்சாரியார் தருகின்ற பிரசாதத்தினை முந்தானையில் வாங்கி, அருகிலுள்ள குளத்தின் படிக்கட்டுகளில் இடுகின்றனர். பின்பு இரு கைகளையும் பின்னால் கட்டிக்கொண்டு உண்கின்றனர்.[2] இது போல மண்சோறு உண்ணும் வழமை இக்கோவிலில் மாறுபட்டு உள்ளது.

பகுத்தறிவாளர்கள் மண்சோறு சாப்பிடும் வழக்கம் மூடப்பழக்கம் என்கின்றர். இந்த மண்சோறு சாப்பிடும் வழக்கம் தற்போது போராட்ட வடிவாகவும் மாறியுள்ளது.

ஆதாரங்கள்

தொகு
  1. தமிழனுக்குத் தமிழின் பெருமையை ஆங்கிலத்தில் சொன்னால்தான் புரியும் போலிருக்கிறது. தினமணி சனவரி 15, 2015
  2. குழந்தைவரம் வேண்டி பெண்கள் மண்சோறு சாப்பிட்டு வழிபாடு - தினத்தந்தி சனி, ஆகஸ்ட் 15,2015
"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்சோறு_சாப்பிடுதல்&oldid=2419819" இலிருந்து மீள்விக்கப்பட்டது