மண்டபம் விசுவநாதன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மண்டபம் விஸ்வநாதன் பத்திரிகையாளர். இந்தியன் எக்ஸ்பிரஸ் குரூப் தினமணி நாளிதழில் கால் நூற்றாண்டு காலத்திற்கு பணியாற்றியவர். இலங்கை இனப்பிரச்சனை குறித்து பல புதிய தகவல்களைவெளியிட்டவர். தினமணியின் ஆசிரியராக பணியாற்றி மறைந்த ஏ.என்.சிவராமன் இலங்கை இனப்பிரச்சனை குறித்து தினமணியில் நடுப்பக்கக் கட்டுரைகள் எழுதியபோது மண்டபம் விஸ்வநாதன் உடனிருந்தவர். வயது முதிர்ந்த ஏஎன்எஸ் அவர்கள் சொல்லச்சொல்ல இவர்தான் கட்டுரைகளை எழுதி தினமணிக்கு தருவார். இலங்கை தமிழ் போராளிகள் குழுத் தலைவர்கள் பத்மநாபா, பாலகுமார், பிரபாகரன், உமா மகேஸ்வரன், அரசியல் தலைவர்கள் தொண்டைமான், அமிர்தலிங்கம் மற்றும் பலர் மண்டபம் விஸ்வநாதனுடன் நெருக்கமான செய்தித் தொடர்பு வைத்திருந்தனர். இந்திய அரசு ஏற்பாடு செய்து, இலங்கை போராளிக்குழுத் தலைவர்கள் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்தியபோது உடனுக்குடன் தினமணியில் செய்திகளை வெளிட்டார். அப்போது ஆங்கில, தமிழ் நாளிதழ்கள் தினமணியில் இவர் வெளியிட்ட செய்திகளை அப்படியே வெளியிட்டன. ஜார்ஜ் பெர்னாண்டஸ் மத்திய பாதுகாப்பு அமைச்சராக பதவி ஏற்றவுடன், பாதுகாப்பு ரீதியில் சேது சமுத்திரத் திட்டம் தேவையா என்பதை அறிந்து கொள்ள முப்படைத் தலைவர்களுடன் தனுஷ்கோடிக்கு வந்தார். அப்போது மண்டபம் விஸ்வநாதனை தன்னுடன் ஹெலிஹோப்டேரில் அழைத்துஸ் சென்று கச்சத்தீவு, பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா ஆகியவற்றை பார்வையிட்டார்.
மண்டபம் விஸ்வநாதன் ராமநாதபுரம் நகரில் 1957 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சன்முகவேலு-களஞ்சியம் தம்பதிகளுக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.ராமேஸ்வரம், ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் விழுப்புரம், புதுச்சேரி ஆகிய மாவட்ட தலைநகரங்களில் தினமணி நிருபராகப் பணியாற்றினார். தற்போது பிரபல நிறுவனகளுக்கு மாத இதழ்கள் தயாரித்து தரும் பொறுப்பாசிரியராக உள்ளார். சென்னை தாம்பரத்தில் வசிக்கும் இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். மதுரை மாவட்டம் தே. கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமத்தின் நிறுவனர் மறைத்த கா.முனியாண்டி இவரது தாத்தா. மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் சேதுராமன், எம்.ஜி.ஆர் பல்கலைகழக நிறுவனர் ஏ.சி.சண்முகம் ஆகியோரின் அரசியல் ஆலோசகராக உள்ளார்.