மண்வாசனை (அறிவியல்)
மண்வாசனை ( Petrichor) என்பது மழை நீர் உலர்ந்த மண் மீது விழும்போது ஏற்படும் வாசனையாகும். பல மனிதர்களுக்கு இந்த வாசனை பிடிக்கும். காய்ந்த மண் மீது மழைத்துளி படும்போது ஏற்படும் வேதிவினையால் இந்த வாசனை ஏற்படுகிறது.
மண்ணில் வாழும் இழைபாக்டீரியாக்கள் என்கிற நுண்ணுயிர்கள் வெளியிடும் சியோச்மின் என்னும் சேர்மத்தால் இந்த வாசனை ஏற்படுகிறது. தங்கள் இனத்தைப் பெருக்கும் நோக்குடன் காய்ந்த மண்ணில் இவை தங்கள் வித்துக்களை வெளியிடுகின்றன. மழை பெய்யும்போது மண்ணில் வேகமாக விழும் நீர்த்துளிகளால் இவ்வித்துகள் மண்ணில் இருந்து சிதறி இனவிருத்திக்காகக் காற்றில் பயணிக்கின்றன. அவற்றுள் சில நம் மூக்கை வந்தடைகின்றன. இது அல்லாது மழை பெய்வதற்கு முன் ஒரு வாசனை வரும். அது ஓசோனின் வாசனையாகும்.[1]
மண்வாசனை, மரபணுக்கள் வழியாகக் கடத்தப்பட்டு மனிதர்களுக்குப் பிடித்தமான வாசனையாக உள்ளது.[2]
மேற்கோள்
தொகு- ↑ Yuhas, Daisy (July 18, 2012). "Storm Scents: It's True, You Can Smell Oncoming Summer Rain: Researchers have teased out the aromas associated with a rainstorm and deciphered the olfactory messages they convey". Scientific American. http://www.scientificamerican.com/article.cfm?id=storm-scents-smell-rain. பார்த்த நாள்: July 20, 2012.
- ↑ Palermo, Elizabeth (21 June 2013). "Why Does Rain Smell Good?". LiveScience.com. பார்க்கப்பட்ட நாள் 17 January 2015.