நூல் மதம் என்பது நூல் எழுதுதலின் கோட்பாடு. இது சமயக் கோட்பாடு அன்று. நூல் கோட்பாடு. நாலாசிரியரின் உத்திக் கோட்பாடு. இந்தக் கோட்பாட்டை நன்னூல் 7 வகையினதாகப் பகுத்துக் காட்டுகிறது.[1]

அவை:

  1. உடன்படல் [2]
  2. மறுத்தல் [3]
  3. பிறர்தம் மதமேற் கொண்டு களைவே [4]
  4. தாஅன் நாட்டித் தனாது நிறுப்பே [5]
  5. இருவர் மாறுகோள் ஒருதலை துணிவே [6]
  6. பிறர்நூல் குற்றம் காட்டல் [7]
  7. ஏனைப் பிறிதொடு படாஅன் தன்மதம் கொளலே எந்தம் மோட்பாட்டையும் பின்பற்றாமல் தன் கோட்பாட்டை நிலைநாட்டல்

என்பன அந்த நூல் கோட்பாடுகள்.

அடிக்குறிப்பு

தொகு
  1. எழு வகை மதமே உடன்படல் மறுத்தல்
    பிறர்தம் மதமேற் கொண்டு களைவே
    தாஅன் நாட்டித் தனாது நிறுப்பே
    இருவர் மாறுகோள் ஒருதலை துணிவே
    பிறர்நூல் குற்றம் காட்டல் ஏனைப்
    பிறிதொடு படாஅன் தன்மதம் கொளலே (நன்னூல் 11)

  2. முன்னோர் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளுதல்
  3. முன்னோர் கருத்தை மறுத்தல்
  4. முன்னோர் கருத்தை ஏற்றுக்கொண்டு அது பொருந்தாது என விலக்கல்
  5. தன் புதிய கருத்தை நிலைநாட்டுதல்
  6. முன்னோர் இருவரோ, பலரோ மருத்தில் மாறுபட்டு நிற்கும்போது, அவர்களில் யாராவது ஒருவரின் கருத்தினை மட்டும் ஏற்றுக்கொண்டு நூல் எழுதுதல்
  7. பிறர் நூலில் குற்றம் காணல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதம்_(நூல்)&oldid=2745867" இலிருந்து மீள்விக்கப்பட்டது