மதிப்புக் கூட்டு வரி

(மதிப்பு கூட்டு வரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மதிப்புக் கூட்டு வரி அல்லது பெறுமதி சேர் வரி (value-added tax) என்பது, பரிமாற்றங்களின்போது அதாவது விற்பனையின்போது விதிக்கப்படுகின்ற வரியாகும். ஆனால், ஒவ்வொரு பரிமாற்றத்தின்போதும் அதிகரிக்கின்ற அல்லது கூடுகின்ற மதிப்பின் அடிப்படையிலேயே இவ்வரி விதிக்கப்படுகின்றது. இதனால், விற்பனை விலையின் மொத்தப் பெறுமானத்தின் அடிப்படையில் விதிக்கப்படும் விற்பனை வரியிலிருந்து இது வேறுபடுகின்றது. இதன் காரணமாக ஒரு பண்டத்தின் மீதான மதிப்புக் கூட்டு வரியின் மொத்த அளவு அப்பண்டம் எத்தனை படிகளூடாக நுகர்வோரை வந்தடைகிறது என்பதில் தங்கியிருப்பதில்லை.[1]

இவ்வாறு விற்பனையாளர் செலுத்திய வரிக்கான செலவு, குறித்த பண்டத்தின் விலையில் பொதிந்திருக்கின்றது. இதனால் இந்த வரிச்செலவை இறுதியாக ஏற்றுக்கொள்வது நுகர்வோரேயாகும். வரிச்செலவை ஏற்றுக்கொள்பவரிடமன்றி வேறொருவரிடமிருந்து இவ்வரி அறவிடப்படுவதனால், மதிப்புக் கூட்டுவரி ஒரு மறைமுக வரியாகும். முதலில் வாங்குபவர் செலுத்திய விலை மற்றும் அதன் பின்னர் அதே பொருளை அடுத்தடுத்து வாங்கும் ஒவ்வொருவரும் செலுத்தும் விலை ஆகியவற்றிற்கு இடையிலான வேறுபாட்டின் மீது மட்டுமே வரி விதிக்கப்படுவதால் ("மதிப்பு கூட்டப்படுதல்") வரி விதிப்பின் விழு தொடர் விளைவானது தவிர்க்கப்படுகிறது.

மேலும் பார்க்க தொகு

மதிப்பு கூட்டு வரி இந்தியா தொகு

மேற்கோள்கள் தொகு

  1. http://tamil.thehindu.com/business/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-vat-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/article5688612.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதிப்புக்_கூட்டு_வரி&oldid=3508344" இலிருந்து மீள்விக்கப்பட்டது