மதியம்பட்டி ஏரி
மதியம்பட்டி ஏரி தமிழ்நாடு, நாமக்கல் மாவட்டம், மதியம்பட்டியில் ஊருக்குக் கிழக்கே அமைந்துள்ளது.[1] திருமணிமுத்தாறு இதன் முக்கிய நீர் ஆதாரம் ஆகும்.
மதியம்பட்டி ஏரி | |
---|---|
அமைவிடம் | மதியம்பட்டி, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு |
ஆள்கூறுகள் | 11°29′40.3″N 78°03′21.4″E / 11.494528°N 78.055944°E |
முதன்மை வரத்து | திருமணிமுத்தாறு ஆறு |
முதன்மை வெளியேற்றம் | ஏரிகரை மதகு |
வடிநில நாடுகள் | இந்தியா |
மேற்பரப்பளவு | 0.1 km2 (0.039 sq mi) |
குடியேற்றங்கள் | மதியம்பட்டி |
மதியம்பட்டி ஏரி வெண்ணந்தூரை அடுத்த மதியம்பட்டி ஊராட்சியில் உள்ளது . சேலம் சேர்வராயன் மலை பகுதியில் பெய்யும் மழை நீர் திருமணிமுத்தாறு ஆற்றின் வழியாக இந்த ஏரிக்கு வருகிறது. பின்னர் இந்த ஏரி நிரம்பி வெளியேறும் உபரிநீர் மீண்டும் திருமணிமுத்தாற்றின் வழியாக சென்று பரமத்திவேலூரில் காவிரி ஆற்றில் கலக்கிறது. மதியம்பட்டி ஏரி நீரை நம்பி அந்த பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் நெல், பருத்தி, தென்னை ஆகியவற்றை சாகுபடி செய்து வருகின்றனர்.[2] இப்பகுதி விவசாயத்திற்கு பெரும் பங்கு வகிக்கிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "மதியம்பட்டி ஏரி".
- ↑ "திருமணிமுத்தாற்றில் ஆக்கிரமிப்பு: நீர்வரத்து இல்லாமல் மேய்ச்சல் நிலமாக மாறிய மதியம்பட்டி ஏரி-விவசாயிகள் வேதனை". Dailythanthi.com. 2021-07-26. பார்க்கப்பட்ட நாள் 2021-11-21.
- ↑ "மேய்ச்சல் நிலமாக மாறிய மதியம்பட்டி ஏரி". தினமலர். 5-09-2016. http://www.dinamalar.com/news_detail.asp?id=1600277&Print=1. பார்த்த நாள்: 25-04-2018.