மதிலொட்டி
மதிலொட்டி சிறுவர் விளையாட்டுகளில் ஒன்று.
இது உல்லாச விளையாட்டு. இதில் வெற்றியோ தோல்வியோ இல்லை. இந்த வேடிக்கை விளையாட்டை சிறுவர்கள் விளையாடும்போது பெரியவர்கள் விரும்பிப் பார்த்து மகிழ்வர்.
ஆடும் முறை
தொகுவிளையாடும் சிறுவர்கள் இரண்டு அணிகளாகப் பிரிவர். ஆள்மேல் ஏறினால் தாங்கக்கூடிய இணையான நிலையினர் மாறி மாறி இரு அணிகளிலும் இடம் பெறுவர். முதலில் ஒரு அணியிலுள்ள வலிமையானவர் ஒரு சுவரை (மதிலை) ஊன்றிப் பிடித்துக்கொண்டு நிற்பார். பின்னர் அடுத்த வலிமையாளர் அவரது இடுப்பைப் பிடித்துக்கொண்டு நிற்பார். அந்த அணியிலுள்ள மற்றவர்கள் ஆள்தாங்கும் வலிமை வரிசையில் முன்னுள்ளவர் இடுப்பைப் பிடித்துக்கொண்டு நிற்பர். இவ்வாறு ஆள் தாங்குவோர் தொடர் அமையும்.
அடுத்த அணியினர் அந்த அணியினர் முதுகில் ஏறிச் சென்று முதலாமவர் சுவரைப் பற்றி நிற்க அவரது அணியிலுள்ள ஏனையோர் அடுத்தவர் அடுத்தவர் முதுகில் தன் முன்னே உள்ள தன் அணியினரின் இடுப்பைப் பிடித்துக்கொண்டு நிற்பர். எல்லாரும் எல்லார்மீதும் ஏறி நின்றதும் ஆள் தாங்கும் அணியினர் தம் உடலை மெதுவாக ஆட்டுவர். மேலே நிற்பவர் யாரும் விழாவிட்டால் சற்று வேகமாக ஆட்டுவர். இப்படி ஒருவர் விழும்வரை ஆட்டுவர். ஒருவர் விழுந்தால் அனைவரும் விழ நேரும். அல்லது தொடர் அறுபடும். எது நிகழ்ந்தாலும் அடுத்த ஆட்டம் தொடங்கும். அடுத்த ஆட்டத்தில் ஆள்தாங்கும் அணி ஆளேறும் அணியாக மாறும்.
இவற்றையும் பார்க்க
தொகுகருவிநூல்
தொகு- இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980