மதிவரர்
மதிவரர் என்பவர் நாலடியார் நூலுக்கு உரை செய்திருப்பதாக நாலடியார் உரைப்பிரதி ஏடு ஒன்றிலுள்ள பாடல் தெரிவிக்கிறது.
- நல்லோர் அருள் செய் நாலடி நாறூற்றின்
- சொல்லோர் பொருள் அனைத்தும் தோன்றியதே – கல்வி
- வரும்பொருள் நூல் கொண்ட மதிவரன் தன் வாக்கால்
- அரும்பதம் இட்ட அழகு
இந்தப் பாடலை எண்ணிப்பார்க்கும்போது இந்த உரையாசிரியர் பதுமனார் மாணாக்கர் ஆகலாம் என்றும், 13ஆம் நூற்றாண்டினர் என்றும் கொள்ளலாம்.
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, 2005