மதுரா பாலியல் வல்லுறவு வழக்கு

மதுரா பாலியல் வல்லுறவு வழக்கு (Mathura rape case) 26 மார்ச் 1972 அன்று இந்தியாவில் நடந்த சிறைக்காவல் பாலியல் வல்லுறவு சம்பவம் ஆகும் , இதில் மதுரா என்ற இளம் பழங்குடி பெண், மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் தேசைகஞ்ச் காவல் நிலைய வளாகத்தில் இரண்டு காவல் துறையினரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார். உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்த பிறகு, பொதுமக்களின் எதிர்ப்புகளும் , போராட்டங்களும் நடைபெற்றன, இது இறுதியில் குற்றவியல் சட்ட திருத்த சட்டம் 1983 (எண் 43) மூலம் இந்திய கற்பழிப்பு சட்டத்தில் திருத்தங்களுக்கு வழிவகுத்தது. [1] [2]

சம்பவம்

தொகு

மதுரா ஒரு இளம் பழங்குடி பெண், அவருடைய இரண்டு சகோதரர்களில் ஒருவருடன் வசிக்கிறார். [3] அவள் ஒரு ஆதிவாசி . இந்த சம்பவம் 26 மார்ச் 1972 அன்று நடந்ததாக சந்தேகிக்கப்படுகிறது, அந்த நேரத்தில் அவருக்கு வயது 14 முதல் 16 வயது வரை இருந்துள்ளது. [3] மதுரா அவ்வப்போது நுசி என்ற பெண்ணுடன் வீட்டு உதவியாளராக பணிபுரிந்தார். [4] அவளை திருமணம் செய்ய விரும்பிய நுசியின் மருமகனான அசோக்கை அவள் சந்தித்தாள், ஆனால் அவளுடைய சகோதரர் அதற்கு உடன்படவில்லை . அவர் தனது சகோதரி, இளவர் என்றும் அவர் அசோக் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களால் கடத்தப்பட்டதாக கூறி உள்ளூர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றார். புகாரைப் பெற்ற பிறகு, காவல்துறை அதிகாரிகள் அசோக் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பொது விசாரணையைத் தொடர்ந்து, மதுரா, அவரது சகோதரர் அசோக் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். அந்த நேரத்தில் அவரது உறவினர்கள் வெளியே காத்திருக்கும்படியும் , மதுராவை , அறையிலேயே இருக்கும்படியும் அவர்கள் கூறினர். [5] பின்னர் இரண்டு காவலர்கள் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டனர்.

அவளது உறவினர்கள் மற்றும் கூடியிருந்த மக்கள் போலீஸ் சவுக்கியை எரிப்பதாக அச்சுறுத்தியபோது, குற்றம் சாட்டப்பட்ட இரண்டு காவலர்களான கண்பட் மற்றும் துக்காராம் ஆகியோர் பஞ்சநாமாவை (சான்றுகளின் சட்டப் பூர்வ பதிவினை) தாக்கல் செய்ய ஒப்புக்கொண்டனர்.[6]

வழக்கு

தொகு

இந்த வழக்கு 1 ஜூன் 1974 அன்று குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பானது. மதுரா 'உடலுறவுக்கு பழக்கமாக இருந்ததால், அது அந்தப் பெண்ணின் சுய விருப்பத்தின் பேரிலேயே நடந்தது என்றும், அந்த சூழ்நிலைகளில் பாலியல் உடலுறவு நடைபெற்றது என்பதனை மட்டுமே நிரூபிக்க முடியும். எனவே இதனை வல்லுறவாக ஏற்றுக் கொள்ள இயலாது என தீர்ப்பளித்தனர். [7]

மேல்முறையீட்டில், மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் குற்றவியல் நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாது, குற்றம் சாட்டப்பட்டவருக்கு முறையே ஒன்று மற்றும் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. கடுமையான அச்சுறுத்தல்களால் தூண்டப்பட்ட பயத்தின் காரணமாக பெண்ணின் ஒப்புதலோடு நடைபெறுவதனை பாலியல் உடலுறவாக அல்லாது பாலியல் வல்லுறவாகவே எடுத்துக் கொள்ளப்படும் என்று தீர்ப்பளித்தது.

பின்விளைவு

தொகு

1979 செப்டம்பரில், தீர்ப்பு அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, சட்டப் பேராசிரியர்கள் உபேந்திர பாக்சி, ரகுநாத் கேல்கர் மற்றும் தில்லி பல்கலைக்கழகத்தின் லோதிகா சர்க்கார் மற்றும் புனேவைச் சேர்ந்த வசுதா தாகம்வார் ஆகியோர் உச்சநீதிமன்றத்திற்கு ஒரு திறந்த கடிதம் எழுதி, தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். "இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய இந்திய காவல்துறைக்கு உரிமம் அளிக்கிறதா" என்றும் [8] தன்னிச்சையான பரவலான போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மூலம் மகளிர் அமைப்புகள் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரினர். இது பரவலான ஊடக கவனத்தினைப் பெற்றது. [9]

சான்றுகள்

தொகு
  1. "Older friends". 13 January 2013. http://www.mid-day.com/columnists/2013/jan/130113-opinion-paromita-vohra-old-er-friends.htm. 
  2. B. Suguna (1 January 2009). Women S Movements. Discovery Publishing House. pp. 66–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8356-425-0. பார்க்கப்பட்ட நாள் 9 June 2013.
  3. 3.0 3.1 Basu (8 November 2013). "The Girl Whose Rape Changed A Country". http://edition.cnn.com/interactive/2013/11/world/india-rape/. 
  4. Basu (8 November 2013). "The Girl Whose Rape Changed A Country". http://edition.cnn.com/interactive/2013/11/world/india-rape/. 
  5. Maya Majumdar (1 January 2005). Encyclopaedia of Gender Equality Through Women Empowerment. Sarup & Sons. pp. 297–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7625-548-6. பார்க்கப்பட்ட நாள் 9 June 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. Kamini Jaiswal (12 October 2008). "Mathura rape case". The Sunday Indian. Archived from the original on 30 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 5 June 2013.
  7. Indira (20 January 1999). "Slamming the doors of justice on women". http://www.indianexpress.com/Storyold/74290/. 
  8. Khullar, p. 132
  9. Michael T. Kaufman (20 April 1980). "Rape Case Reversal Infuriates Indian Women's Groups; Assaults on Women Reported 'I was Appailed' Class and Sexist Prejudice". The New York Times. https://www.nytimes.com/1980/04/20/archives/rape-case-reversal-infuriates-indian-womens-groups-assaults-on.html.