மதுரைக் கண்டராதித்தனார்

மதுரைக் கண்டராதித்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 317.

புரிமட மரையான் கருநரை நல்லேறு - பாடலடி

பெயர்விளக்கம்

தொகு
  • கண்டர் = மணிமிடற்றன், சிவன்
  • ஆதித்தன் = சாளின் ஆதியைத் தோற்றுவிப்பவன்

பாடல் சொல்லும் செய்தி

தொகு

பிரிவுக் காலத்தில் பொறுத்துக்கொள்ளுமாறு தலைவியைத் தோழி வற்புறுத்துகிறாள்.

கருநிறமும் நரைமுடியும் கலந்துள்ள ஆண் மரையான் புளிக்கும் நெல்லிக்காயைத் தின்றுவிட்டு அதன் இனிப்புக்காக நீர்க்கரையில் பூத்திருக்கும் மலர்கள் கலங்கும்படி சென்று மலையேறிச் சென்று பைஞ்சுனை நீரைப் பருகி மகிழும் நாடன் நம் தலைவன்.

(தலைவன் - மரையான் ஏறு, நெல்லி - தலைவி) இனிமை கண்டவர் தலைவியை விடமாட்டார் என்று சொல்லித் தலைவியைத் தேற்றுகிறாள்.

வடபுலத்திலிருந்து வாடைக்காற்று வீசியதால் அழிந்துபோன மழை தென்புலத்தில் பனியாகப் பொழிகிறது. (உண்மையான பனிக்காலம் இது அன்று) எனவே கவலை கொள்ளவேண்டாம் என்கிறாள்.