மதுரைத் தமிழக் கூத்தனார்
மதுரைத் தமிழக்கூத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது புறநானூறு 334.
தமிழ்நாட்டில் தமிழக்கூத்தும், ஆரியக்கூத்தும் நடைபெற்றன.அவற்றுள் இவர் தமிழக்கூத்து ஆடிய பாணர் குடியினர்.
இப்பாடலின் அடிகள் இடையிடையே சிதைந்துபோயின. எஞ்சியுள்ளவற்றில் காணப்படும் செய்திகள் மட்டுமே இங்குச் சொல்லப்படுகின்றன.
- திணை - வாகை
- துறை - மூதின்முல்லை
பாடல் சொல்லும் செய்திகள்
தொகுஇப் பாடலில் 3 செய்திகள் உள்ளன.
- மன்றத்தில் சிறுவர் ஆர்த்து ஆரவாரம் செய்தால் காட்டு முயல் படப்பையில் ஒடுங்கிக்கொள்ளுமாம்.
- பாணர் இளைப்பாறியும், பரிசிலர் பாதுகாப்புப் பெற்றும் மகிழ்ச்சியோடு பேசப் பேச மனையோள் கூவிக் கூவி அழைத்து உண்ணும் உணவைத் தந்துகொண்டே இருப்பாளாம்.
- அந்த வீட்டின் தலைவன் போர்க்களத்தில் பகையரசர் யானைகளிடமிருந்து கைப்பற்றிய அணிகலப் பொருள்களைத் தன்னை நாடி வந்த பரிசிலர்களுக்கு வழங்கிக்கொண்டே இருப்பானாம்.
இவை முதிர்ந்த இல்லத்தாரின் பண்பிருப்புகள்.
- மூதில் = பண்பில் முதிர்ந்தோர் இல்லம்
- முல்லை = பண்பிருப்பு