மதுரைப் பாலாசிரியர் சேந்தன் கொற்றனார்

மதுரைப் பாலாசிரியர் சேந்தன் கொற்றனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 322.

பால் = தூய்மை. பாலாசிரியர் = நன்னடத்தையால் பாடம் புகட்டும் ஆசிரியர்.
சேந்தன் என்னும் சொல் செவ்வேள் முருகனைக் குறிக்கும்.

'வாள்வரிக் கடுங்கண் வயப்புலி'

பாடல் சொல்லும் செய்தி தொகு

காத்திருக்கும் தலைவனுக்குக் கேட்கும்படி தலைவியும், தோழியும் பேசிக்கொள்கின்றனர்.

தலைவியை வருத்தியது அணங்கு (பேய்) என்று சொல்லி வேலன் இசைக்கருவிகள் முழங்க விழாக் கொண்டாடி நோய் தணியுமாயின் அதைவிடக் கொடியது வேறொன்றும் இருக்கமுடியாது என்கின்றனர்.

நாடன்தானே அணங்கினான்?

நாடன்

பெண்வரிப்புலி பிணங்கர்ப் புதரில் உட்குபசியுடன் ஒடுங்கிக் கிடக்கிறது என்று எண்ணி அதன் பசியைப் போக்குவதற்காக ஆண்வரிப்புலி ஆட்கள் நடமாடக்கூடிய புழைக்குகையில் பதுங்கியிருக்கும் மலைநாட்டவன் இந்தப் பாடலின் தலைவன்.

பழந்தமிழ் தொகு

  • 'ஆங்கனம்' = அவ்வாறு
  • உட்கு பசி = நிமிர முடியாதபடி வயிறு வளைந்துகிடக்கும் பெரும்பசி