மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்

மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு 92.

பால் = தூய்மை. பாலாசிரியர் = நன்னடத்தையால் பாடம் புகட்டும் ஆசிரியர்.
தாமனார் என்னும் பெயர் மாலையணிந்து காட்சி தரும் முருகனையும், திருமாலையும் குறிக்கும். கடவுள் பெயரை மக்களுக்கு இட்டு வழங்குவது மரபு.

பாடல் சொல்லும் செய்திதொகு

தலைவன் தலைவியை அடைய இரவில் சென்றான். அவனால் அடைய முடியவில்லை. எனினும் தலைவியைக் கண்டான். தோழி பகலில் வந்து பெறுமாறு சொல்கிறாள். அந்த சொல்லில் திருமணம் செய்துகொண்டு பெறுக என்னும் பொருளும் அடங்குமாறு கூறுகிறாள்.

  1. நானும் இவளும் நாளை தினைப்புனம் காக்க வருவோம். அங்கே மந்தியும் அறியா மரமடர்ந்த காடு உள்ளது. அங்குக் காந்தள் பூத்திருக்கும் நல்லிடம் ஒன்று உள்ளது. அருகிலுள்ள அருவியில் நீராடிய பின் பாம்பு உமிழந்த மணி வெளிச்சத்தில் அங்கு விளையாடிக்கொண்டிருப்போம். அந்தச் சாரலுக்கு வாரல் (வருக)
  2. சாரலுக்கு வாரல் (வராதே)

இரவில் வந்த வழி

மழை பொழிந்த நள்ளிரவு. வரிப்புலி முஞ்சர நானையைத் தாக்கிவிட்டுக் குழுமும்.(முழங்கும்). இந்தப் புலி குழுமும் சாரலில் வாரல் (வராதே)