மதுரைப் புல்லங்கண்ணனார்
மதுரைப் புல்லங்கண்ணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு 161.
புல்லம் என்பது மதுரையில் இருந்த ஒரு பகுதி.
கண்ணனார் புலவர் பெயர்.
பாடல் சொல்லும் செய்தி
தொகுதலைவன் பொருளீட்டச் செல்லப்போவதைத் தலைவி முனபே தெரிந்துகொண்டு கண்ணீர் வடித்தாள். இதனைச் சொல்லித் தோழி தலைவனைத் தடுத்து நிறுத்துகிறாள்.
வணங்கிச் சுருண்டிருக்கும் தலைமுடியை உடைய வன்கண் ஆடவர் பொருளோடு வரும் மக்களை வழியிலேயே கொல்வார்களாம். அங்கு இறந்துகிடக்கும் முடைநாற்றம் வீசும் பிணங்களைத் தின்னக் கழுகுகள் காத்துக் கிடக்குமாம். இப்படிப்பட்ட வழியில் தலைவன் செல்ல நேருமே என்று தலைவி கண்ணீர் வடிக்கிறாள் என்று தலைவனிடம் சொலகிறாள்.
பிரியும் முன்பே கண்ணீர் வடிப்பவள் பிரிந்து சென்றால் என்ன ஆவாள்? என்று தோழி விளங்கவைத்தபோது தலைவன் பொருள்செயச் செல்வதை நிறுத்திக்கொள்கிறான்.