மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்

மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை5 317.

புலவர் பெயர் விளக்கம்

தொகு

பொதுவாகச் சுனையில் பூத்திருக்கும் குவளைப் பூவை மகளிர் கண்களுக்கு உவமையாகக் கூறுவதுதான் வழக்கம். இந்தப் புலவர் ஆயமகளிர் கொய்த குவளைப் பூவைத் தலைவியின் கண்களுக்கு உவமையாகக் கூறியுள்ளார். இந்தப் புதுமை கருதி இந்தப் புலவர் நாகன் வேட்டனார் பெயருக்குப் 'பூவண்ட' என்னும் அடைமொழி சேர்க்கப்பட்டுள்ளது.

பாடல் சொல்லும் செய்தி

தொகு

நாட! நீ நயந்தோள் கேண்மை அன்னை அறியின் இவள் கண் பனி கலந்து என்ன ஆவாள்? எனவே திருமணம் செய்துகொண்டு இவளைப் பெறுக என்கிறாள் தோழி.

இறைச்சிப் பொருள்

தொகு

தினையைக் கிளி கவரும் நாட்டை உடையவன் தலைவன் என்று கூறப்படுவதில் தினை தலைவியையும், கிளி தலைவனையும் உணர்த்தும்.

உவமை

தொகு

பெண்யானையைப் புணரும்போது ஆண்யானையின் கை வளைந்திருப்பது போலத் தினைக்கதிர் வளைந்திருக்கும்.