மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்

மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 144.

பெயர் விளக்கம்

தொகு

கோடு என்னும் சொல் மலையைக் குறிக்கும். இந்தப் புலவர் கொற்றனார் மலைப்பகுதியில் வாழ்ந்ததால் கோடங்கொற்றனார் எனப்பட்டார்.

பாடல் சொல்லும் செய்தி

தொகு
  • மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது.

கடலோரக் கழிகளில் பூத்திருக்கும் காவி மலர்களைப் பறித்து விளையாடுவாள். வெள்ளை நுரையோடு வரும் கடலலைகளோடு விளையாடுவாள். ஆயத்தாருடன் சேர்ந்தே விளையாடுவாள். இவற்றையெல்லாம் விட்டுவிட்டுத் தனியே தன் காதலனுடன் என் மகள் சென்றுவிட்டாள்.

பாலைநிலத்தில் கல்லுப் பரல்கள் காலை உருத்துவதைப் பொருட்படுத்தாமல் சென்றுவிட்டாள். மழை இல்லாத மேகம் உலாவும் மலைக்குச் சென்றுவிட்டாள். விலங்குகள் நடமாடும் மலைநாட்டுக்குச் சென்றுவிட்டாள். அந்தோ! என் மனம் என்ன பாடு படுகிறது!