மதுரை இளங்கௌசிகனார்

மதுரை இளங்கௌசிகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு 381.

பாடல் சொல்லும் செய்தி

தொகு

பொருள் தேடப் பிரிந்து சென்ற தலைவன் பாலைநிலச் சுரவழியில் செல்லும்போது தன் தலைவியின் எண்ணம் வரத் தன் நெஞ்சோடு பேசுகிறான்.

வானவன் என்னும் சேரன் அழித்த பகைவர் நாடு போல் அவள் அழிந்த கோலத்தில் பெருமூச்சு விட்டுக்கொண்டிருப்பாள்.
குவளை மொட்டுப் போன்ற அவள் கண் பனியைக் கொட்டிக்கொண்டிருக்கும். அங்கே அவள் அப்படி.

இங்கே நான் வெயில் சுட்டெரிக்கும் சுரவழியில் இருக்கிறேன். இங்கே ஒரு நெடுந்தகை யானையின் கொம்பைப் பிடுங்கி வைத்திருந்தான். ஆண் ஆளி ஒன்று அந்த யானைக்கொம்பை எடுத்து அதன் குருத்தை மென்று தின்றுகொண்டிருக்கிறது. இங்கு நிழலெல்லாம் சுருண்டுகிடக்கிறது. இங்குள்ள வடுகர் தம் வேட்டைநாயுடன் சென்று வேட்டையாடிக் கொண்டுவந்த இறைச்சித் துண்டுகளைக் கழுகினம் கவர்ந்துகொண்டு வானில் பறக்கிறது. - இது இங்கிள்ள நிலை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரை_இளங்கௌசிகனார்&oldid=3198712" இலிருந்து மீள்விக்கப்பட்டது