அரசு சட்டக் கல்லூரி, மதுரை
அரசு சட்டக் கல்லூரி, மதுரை (Government Law College, Madurai) தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள ஏழு அரசு சட்டக் கல்லூரிகளுள் மதுரையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அரசு சட்டக் கல்லூரியும் ஒன்றாகும். டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இச்சட்டக் கல்லூரியில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சட்டப்படிப்பு படிப்பதற்கான மூன்று ஆண்டுகால இளநிலைச் சட்டவியல் படிப்பும், மேல்நிலைக்கல்வி படித்துத் தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஐந்து ஆண்டு கால சட்டவியல் படிப்பும் உள்ளன.
மதுரையில் சட்ட கல்லூரி 1979 இல் கட்டப்பட்டது. இக்கல்லூரியில் படித்த பலரும் உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக உள்ளனர். தற்போது இக்கல்லூரி கட்டிடம் பராமரிப்பின்றி சேதமடைந்த நிலையில் உள்ளது.[1]
மதுரையில் அரசு சட்டக்கல்லூரியில் புதிதாக கலையரங்கம் மற்றும் நூலகம் அடிக்கல் நாட்டு விழா 2017 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி நடைப்பெற்றது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "மதுரை அரசு சட்டக்கல்லூரியில் கட்டிடங்கள் சேதம்: புதுபித்து தர மாணவர்கள் வலியுத்தல்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/Oct/30/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3265935.html. பார்த்த நாள்: 22 January 2025.
- ↑ "மதுரையில் அரசு சட்டகல்லூரியில் கலையரங்கம் நூலககட்டிடம் அடிக்கல் நாட்டு விழா". விகடன். https://www.vikatan.com/government-and-politics/101049-foundation-stone-laid-for-auditorium-and-library-buildings-in-madurai-law-college. பார்த்த நாள்: 22 January 2025.