மதுரை புத்தகத் திருவிழா 2015

10ஆவது மதுரை புத்தகத் திருவிழா அல்லது மதுரை புத்தகக் கண்காட்சி 2015 என்பது 28 ஆகஸ்டு 2015 முதல் 7 செப்டம்பர் 2015 முடிய பத்து நாட்கள் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியாகும். ஒவ்வொரு ஆண்டும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் புத்தகத் திருவிழாவை நடத்துகிறது. அந்த வகையில் இந்த புத்தகத் திருவிழா 10ஆவது ஆகும்.[1][2][3]

10வது மதுரை புத்தகத் திருவிழா, 2015
10ஆவது மதுரை புத்தகத் திருவிழாவில், பார்வையாளருக்கு தமிழ் விக்கிப்பீடியா குறித்து விளக்கும் நிர்வாகி

நேரம் தொகு

தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை

சிறப்பம்சங்கள் தொகு

  • 2 இலட்சம் தலைப்புகளில் நூல்கள்
  • 250 புத்தக அரங்குகள்

கருத்தரங்கம் தொகு

இப்புத்தகத் திருவிழாவின் போது மாலை 5. 30 மணி முதல் இரவு 9 மணி முடிய சிறப்பு எழுத்தாளர்கள் பங்கேற்கும் சொற்பொழிவுகள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் இலக்கிய நிகழ்ச்சிகள், விசாரணை அரங்கம், சுழலும் சொல்லரங்கம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் போன்றவையும் இடம் பெற்றன.

மேற்கோள்கள் தொகு

  1. மதுரையில் புத்தகத் திருவிழா இன்று துவக்கம்:250 அரங்கங்கள்; 7 செப்டம்பர் வரை நடக்கிறது
  2. மதுரையில் புத்தகத் திருவிழா தொடக்கம்
  3. Tamil titles turn out to be a fair attraction

வெளியிணைப்புகள் தொகு