மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்
மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 332.
பாடல் சொல்லும் செய்தி
தொகுதோழி தலைவனுக்குக் கேட்கும்படி தலைவியிடம் சொல்கிறாள்.
வாடைக்காற்று வீசிச் சில தூறல்கள் விழுந்து முடிந்த கடைசி நாளில் தலைவன் தலைவியுடன் உடனிருந்து அவளது பிரிவுத் துன்பத்தைப் போக்கிச் சில ஆறுதல் மொழிகளைச் சொல்லக்கூடாதா என்பது தோழி சொன்ன செய்தி.
- நாறுயிர் மடப்பிடி = கன்று ஈனப் பெருமூச்சு விடும் பெண்யானை
ஆண்யானை நாறுயிர் மடப்பிடியைத் தழுவிக்கொண்டு செல்லும் குன்றம் கொண்ட மலைகிழவோன் இந்த அகப்பாடலின் தலைவன்.