மதுரை - போடிநாயக்கனூர் இருப்புப்பாதை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழ்நாட்டில் மதுரை சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து தேனி மாவட்டத்திலுள்ள போடிநாயக்கனூர் தொடருந்து நிலையம் வரை அமைக்கப்பட்டுள்ள இருப்புப்பாதை குறுகிய பாதையாகும். இப்பாதை மதுரை சந்திப்பு நிலையத்தில் தொடங்கி பல்கலை நகர், (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்) செக்காணூரணி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி வழியாக போடிநாயக்கனூர் வரை செல்கிறது. இந்த இருப்புப்பாதையில் மதுரையிலிருந்து போடிநாயக்கனூர் வரை செல்லும் ஒரு பயணிகள் தொடருந்து மட்டும் ஒருமுறை சென்று திரும்புகிறது. இந்த தொடருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுவதில்லை.