மத்தாப்பு
மத்தாப்பு என்பது மெதுவாக எரியும் வெடிபொருட்களைக் கொண்டு செய்யப்படுவதும் கையில் பிடித்துக்கொண்டு பற்றவைப்பதுமான வாணவெடியை ஒத்த ஒரு பொருள். இது எரியும்போது பல நிறங்களைக் கொண்ட தீச்சுவாலையையும், தீப்பொறிகளையும் வெளிவிடுவதனால் கவர்ச்சியான கோலங்களை உருவாக்குகின்றது. இலங்கை யாழ்ப்பாணத்தில் இதைப் பூந்திரி என்னும் சொல்லால் குறிப்பிடுவர். பண்டிகைக் காலங்களில் பொதுவாகச் சிறுவர்கள் மத்தாப்புகளைக் கொளுத்தி மகிழ்வர்.[1][2][3]
அமைப்பும் சேர்மானங்களும்
தொகுமிகவும் பொதுவாகக் காணப்படும் மத்தாப்பு, ஏறத்தாழ 20 சமீ நீளமான உலோகக் கம்பியொன்றைக் கொண்டிருக்கும். அதன் ஒரு முனையில், கையில் பிடிப்பதற்கு ஓரளவு இடம் விட்டு அதன் மற்றப் பகுதியில் வெடிபொருளும், பிற பொருட்களும் சேர்ந்த கலவை தடிப்பாகப் பூசப்படும். இப்பூச்சு பின்வருவனவற்றில் ஏதாவது ஒன்றையோ பலவற்றையோ கொண்டிருக்கும்:
- உலோக எரிபொருட்கள்
- வேறு எரிபொருட்கள்
- ஒட்சியேற்றும் பொருட்கள்
- நிறம் வழங்கிகள்
- எரியக்கூடிய பிணைபொருட்கள்
உலோக எரிபொருட்கள்
தொகுஉலோக எரிபொருட்கள் தீப்பொறிகளை உண்டாக்குவதற்கு இன்றியமையாதவை. இவ்வகை எரிபொருள் துகள்களின் பருமனைப் பொறுத்துத் தீப்பொறிகளின் தோற்றம் மாறுபடும். பின்வருவன இவ்வகைச் சேர்மானங்களில் சில.
- அலுமினியம், மக்னீசியம், மக்னாலியம் என்பன வெண்ணிறப் பொறிகளை உருவாக்குகின்றன.
- இரும்பு செம்மஞ்சள் பொறிகளை உருவாக்கக் கூடியது.
- டைட்டானியம் பிரகாசமான வெண்ணிறப் பொறிகளை உருவாக்கும்.
- பெரோடைட்டானியம் பொன்னிறப் பொறிகளைத் தரும்.
வேறு எரிபொருட்கள்
தொகுவேறு எரிபொருட்கள் எரியும் வேகத்தைக் கூட்டிக் குறைப்பதற்குப் பயன்படுகிறது. இவற்றுள்,
என்பன அடங்கும்.
ஒட்சியேற்றிகள்
தொகுஒட்சியேற்றிகள் அல்லது ஒட்சிசன் வழங்கிகள் கட்டாயம் தேவைப்படும் சேர்பொருட்கள். பின்வருவன இவ்வகைச் சேர்பொருட்களுக்கு எடுத்துக்காட்டுகள்.
- பொட்டாசியம் நைத்திரேட்டு
- பேரியம் நைத்திரேட்டு
- இசுட்ரோன்டியம் நைத்திரேட்டு
- பொட்டாசியம் பேர்குளோரேட்டு - இது கூடிய ஆற்றல் கொண்டது வெடிக்கக்கூடியது.
நிறம் வழங்கிகள்
தொகுநிறம் வழங்கிகள் எரியும்போது நிற ஒளிகளை வெளிவிடுகின்றன. பேரியம், இசுட்ரோன்டியம், செப்பு போன்ற உலோகங்களின் குளோரைடுகளும், நைத்திரேட்டுகளும் பல்வேறு நிற ஒளிகளை வெளிவிடக்கூடியவை.
பிணைபொருட்கள்
தொகுபிணைபொருட்கள் சேர்மானங்களை ஒன்றாகப் பிணைத்து வைத்திருக்கின்றன. டெக்சுட்ரின், நைத்திரோசெலுலோசு என்பன இவ்வாறான பிணைபொருட்களில் சில.
மேற்கோள்கள்
தொகு- ↑ "10 safety tips for Guy Fawkes". 5 November 2013. பார்க்கப்பட்ட நாள் 11 August 2014.
- ↑ "Fireworks Information Center". United States Condumer Product Safety Commission. பார்க்கப்பட்ட நாள் 11 August 2014.
- ↑ "Sparklers for Diwali celebrations". 27 October 2013. பார்க்கப்பட்ட நாள் 11 August 2014.