மத்திய சட்டப்பணிகள் அணைக்குழு அமைப்பு - செயல்பாடுகள்

மத்திய சட்டப்பணிகள் ஆணைக்குழுக்கள் - அமைப்பு உச்சநீதிமன்ற நீதிபதியை தலைமைக் காப்பாளர் (Patron - in - Chief) ஆகக் கொண்ட மத்திய சட்டப்பணிகள் ஆணைக்குழு தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு என்றும் அழைக்கப்படுகிறது. இது பிரிவு (3)ன் படி உருவாக்கப்பட்டது. இக்குழுவின் நிர்வாகக்குழுத் தலைவராக ஓய்வு பெற்ற அல்லது பணியிலிருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி பணியாற்றுவார். உறுப்பினர்களின் தகுதி மற்றும் நியமனம் மத்திய அரசால் உச்சநீதிமன்ற நீதிபதியிடம் ஆலோசனை பெற்று நியமனம் செய்யப்படுவர். நியமனம் செய்யப்படும் உறுப்பினர்களுள் ஒருவர் நிர்வாகத் தலைவருக்கு உதவிடும் பொருட்டு உறுப்பினர் செயலராக செயல்படுவார். இக்குழுவினருக்கு ஆகும் நிர்வாக மற்றும் சம்பளச் செலவுகள் யாவும் மத்திய அரசின் தொகுப்பு நிதியிலிருந்து (Consolidated Fund of India) தரப்படும்.

செயல்பாடுகள் தொகு

மக்களுக்கு இலவச சட்ட உதவிகள் கிடைப்பதற்கு தேவையான கொள்கைகளை உருவாக்குவதுடன் மத்திய ஆணைக்குழுவுக்கென ஒதுக்கீடு செய்த நிதியை செயல் திட்டங்களுக்கு ஏற்ப சிக்கனமாக செலவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுதல். சமூக சேவை செய்பவர்களுக்கு சுற்றுச்சூழல் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த பொது நல வழக்குகள் தொடர்வதற்கு சட்ட அறிவை வழங்குவதோடு, கிராமப்புறங்களில் உள்ள பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு சட்ட உதவி முகாம்களை நடத்துதல். சட்ட உதவி ஆராய்ச்சிகளை செய்வதோடு கூடவே ஆய்வு மேற்கொள்பவர்களை ஊக்கப்படுத்துதல். மேலும் சட்டம் மூலமாகக் கிடைக்கும் மக்களின் உரிமைகளை அவர்களுக்கு உணர்த்துதல் - தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஆதிதிராவிடர், பெண்கள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு சட்ட உதவிகளை செய்ய தூண்டுகோலாக இருந்து, பல்வேறு சட்ட உதவிகளை சமூகத்திற்குக் கிடைக்க மத்திய சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆவண செய்கிறது.