மந்தர்பாரியா கடற்கரை
வங்காளதேசத்திலுள்ள ஒரு கடற்கரை
மந்தர்பாரியா கடற்கரை (Mandarbaria Beach) வங்காளதேசத்தின் சத்கீரா மாவட்டத்திலுள்ள சியாம்நகர் துணைமாவட்டத்தில் உள்ளது. இது அரியபாங்கா ஆற்றின் கரையில் உள்ள மந்தர்பாரியா வனத்திற்கு அருகில் 8 கிலோமீட்டர் நீளத்தில் இருக்கும் ஒரு கடற்கரையாகும். இக்கடற்கரை சுற்றுலாப் பயணிகளுக்கோ அல்லது உள்ளூர் மக்களுக்கோ ஒரு பிரபலமான இடமல்ல. மந்தர்பாரியா கடற்கரையின் ஒரு முனையில் சதுப்புநிலக் காடுகள் அமைந்துள்ளன. [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mandar Bariya Sea Beach, Satkhira, Bangladesh". Archived from the original on 2021-04-10. பார்க்கப்பட்ட நாள் 2020-12-11.