மந்திர மருத்துவம்

மந்திர மருத்துவம் என்பது மனிதர்களுக்கு வருகின்ற நோய்களை மந்திரத்தின் துணையால் நீக்குவதாகும். [1] இந்த மருத்துவ முறை இந்தியாவில் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. இது மக்களின் நம்பிக்கையை சார்ந்ததாகும்.

இந்த மந்திர மருத்துவம் கொண்டு மக்களை சமய மாற்றம் செய்வதும் வழக்கத்தில் உள்ளன. சமண மன்னாக இருந்த கூண் பாண்டியனின் வெம்மை நோயை ஞானசம்பந்தன் தீர்க்க, மன்னன் சைவ சமயத்திற்கு மாறினார் என பெரியபுராணம் கூறுகிறது.

இந்து சமயம்

தொகு

இந்து சமயத்தில் மந்திரங்களால் மனித நோயினை குணப்படுத்த முடியும் என நம்பிக்கை உள்ளது. இந்து சமய பெரு தெய்வ வழிபாட்டில் மந்திரங்களை அதற்குண்டான முறைகளைப் பின்பற்றி சொல்வதாலும், எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு 108, 1008 முறைகள் ஜபிப்பதாலும் நோயை குணப்படுத்தலாம்.

மிருத்யுஞ்ஜய எனும் மந்திரத்தால் இறந்தவர்களை உயிர்பிக்க முடியுமென இந்து புராணங்கள் கூறுகின்றன.[2] 2011ல் டாக்டர் சார் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, இந்த மந்திரத்தின் காரணமாக பிழைத்ததாக கனவில் ஒலித்த குரல்! என்ற கட்டுரையில் விகடன் குறிப்பிட்டுள்ளது.

நாட்டாறியல்

தொகு

நாட்டார் தெய்வ கோயில்கள் பலவற்றிலும் தீய சக்திகளுக்கு எதிரான மந்திர சடங்குகள் மனித உடல் நலனுக்காக நடத்தப்படுகின்றன.

  1. மந்திரித்தல் - கயிறு, தகடு, ஓலை
  2. கண்ணேறு அகற்றுதல்
  3. திருநீறு போடுதல்
  4. வேப்பிலை அடித்தல்
  5. பில்லி சூனியம், செய்வினை அகற்றுதல்

மருத்துவர்கள்

தொகு

மந்திர மருத்துவம் செய்கின்றவர்களை அம்மக்கள் பூசாரி, பேயோட்டி, பாம்புக்கடி மருத்துவர், எலும்பு முறிவு வைத்தியர், மந்திரவாதி, சாமியாடி, அருளாடி, நாட்டு வைத்தியர் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்கள்.[3]

ஆதாரங்கள்

தொகு
  1. http://www.tamilvu.org/courses/degree/a061/a0614/html/a0614334.htm
  2. http://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2016/05/17111004/1012573/Mrityunjaya-mantra-to-undo-death.vpf மரணத்தை வெல்லும் மிருத்யுஞ்ஜய மந்திரம் மே 17, 2
  3. http://www.tamilvu.org/courses/degree/a061/a0611/html/a0611003.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=மந்திர_மருத்துவம்&oldid=4062654" இலிருந்து மீள்விக்கப்பட்டது