மந்தி ஓட்டம்

மந்தி ஓட்டம் சிறுவர் விளையாட்டுகளில் ஒன்று.

மந்திக் குரங்கால் முழங்காலை நேராக நிமிர்த்த முடியாது. சிறுவர் தம் கால்களை நிமிர்த்த முடியாதவாறு பிணைத்துக்கொண்டு ஓடுவது மந்தி ஓட்டம். முதலில் நாக்குந்தலாகக் குந்தித் தம் இரு கைகளையும் தம் இரு கால்களுக்கு இடையில் விட்டு வெளிப்புறமாக எடுத்து முன்புறம் கோத்துக்கொண்டு அமர்வர். இப்படி அமர்ந்துகொண்டு தத்தும்போது முழங்கால்களை நிமிர்த்த முடியாது. பள்ளிகளில் இது போட்டி விளையாட்டாக நடத்தப்படுவது உண்டு. யார் முதலில் இவ்வாறு தத்தியோடி உத்திக் கோட்டைத் தொடுகிறாரோ அவருக்கு முதலிட வெற்றி.

இவற்றையும் பார்க்க

தொகு

கருவிநூல்

தொகு
  • கி. ராஜநாராயணன், வட்டார வழக்குச்சொல் அகராதி, ராஜபவனம், இடைச்செவல் வெளியீடு, 1982.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மந்தி_ஓட்டம்&oldid=1017360" இலிருந்து மீள்விக்கப்பட்டது