மனப்போராட்டம்

மனிதனின் மனம் முடிவெடுக்க முடியாமல் தவிப்பதுதான் மனப்போராட்டம் ஆகும்.

வகைகள் தொகு

மனபோராட்டம் பின்வருமாறு மீவகைப்படும்.

  1. அணுகுதல் -அணுகுதல் மனப்போராட்டம்
  2. விலகுதல்-விலகுதல் மனப்போராட்டம்
  3. அணுகுதல்-விலகுதல் மனப்போராட்டம்

அணுகுதல்-அணுகுதல் மனப்போராட்டம் தொகு

மனிதர் விரும்பும் இரண்டு வகை இலக்குகளில் ஒன்றைத் தேர்வு செய்ய அவர் மனம் முடிவெடுக்க முடியாமல் தடுமாறுவதே அணுகுதல்-அணுகுதல் மனப்போராட்டம் ஆகும்.

எடுத்துகாட்டு தொகு

ஒருவர் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் மட்டைப்பந்து விளையாட்டைப் பார்க்கவும், அதே நேரம் திரையரங்கில் விரும்பும் நடிகரின் புதிய திரைப்படத்தைக் காணவும் வாய்ப்பு கிடைக்கும்போது, எதனைத் தேர்வு செய்வதெனத் தவிப்பது அணுகுதல் -அணுகுதல் மனப்போராட்டம் ஆகும். [1]

விலகுதல்-விலகுதல் மனப்போராட்டம் தொகு

மனிதர் விரும்பாத இரண்டு வகை இலக்குகளில் ஒன்றைத் தேர்வு செய்ய அவர் மனம் முடிவெடுக்க , அதிலிருந்து தப்பிக்கவும் அவர் மனம் தடுமாறுவது விலகுதல்-விலகுதல் மனப்போராட்டம் ஆகும்.

எடுத்துகாட்டு தொகு

ஒரு மாணவர் வீட்டுப் பாடத்தை விரும்பவில்லை. அதைச் செய்யாமல் போனால் ஆசிரியர் திட்டுவார். இரண்டுமே விருப்பமில்லாதபோது மாணவரின் மனம் இரண்டிலும் இருந்து தப்பிக்க நினைப்பது விலகுதல்-விலகுதல் மனப்போராட்டம் ஆகும்.

அணுகுதல்-விலகுதல் மனப்போராட்டம் தொகு

மனிதர் விரும்பும் ஓர் இலக்கு வெறுக்கக்கூடியதாகவும் இருந்தால் மனம் அதை விரும்பவா ? அல்லது வெறுக்கவா எனத் தவிப்பது அணுகுதல்-விலகுதல் மனப்போராட்டம் ஆகும்.

எடுத்துகாட்டு தொகு

சர்க்கரை நோயாளி இனிப்பு உண்ண நினைப்பது. இனிப்பு உண்ண விருப்பம்.ஆனால் இனிப்பு உண்பதே நோயை அதிகரிக்கும் என்பதால் வெறுப்பு. இது அணுகுதல்-விலகுதல் மனப்போராட்டம் ஆகும். [2]

மேற்கோள் தொகு

  1. கல்வி மனவியலும் குழந்தைக் கல்வியும். மனவெழுச்சி: சாந்தா பப்ளிஷர்ஸ்,சென்னை. 1995. பக். 139,140. 
  2. கோகிலா தங்கசாமி (2005). கல்வி உளவியல். மனமுறிவும் மனப்போராட்டமும்: மாநிலா பதிப்பகம்,மதுரை.. பக். 175,176. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனப்போராட்டம்&oldid=3867869" இலிருந்து மீள்விக்கப்பட்டது