மனாமா அஜ்மான்
மனாமா ஐக்கிய அரபு அமீரகத்தில் அஜ்மான் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரமாகும். இந்நிலப்பகுதியில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் முன்னணி ராணுவ தளம் இங்கு செயல்பட்டு வருகிறது.
Manama | |
---|---|
ஆள்கூறுகள்: 25°19′49″N 56°1′40″E / 25.33028°N 56.02778°E | |
Country | United Arab Emirates |
Emirate | Ajman |
ஏற்றம் | 233 m (764 ft) |
வரலாறு
தொகு1920 களின் பிற்பகுதியில் தொழிற்துறையின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, அஜ்மான் ஆட்சியாளர் ஷேக் ரஷீத் அல் நுயிமி, அஜ்மானின் 'ரொட்டி கூடை' என்ற வளச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக மனாமாவை அடையாளம் கண்டு, பப்பாளி,எலுமிச்சை மரங்கள் உட்பட பல பயிர்களை உருவாக்க முயன்றார்.இங்கு 1930 களில் தேன் சேகரிப்பது முறைப்படுத்தப்பட்டது.இங்கு உலகத்தரம் வாய்ந்த இரு தேன் வகைகளும் இரண்டு பருவங்களிலும் கிடைக்கிறது.[1]
அஞ்சல் தலை சேகரிப்பு
தொகு1963 ஆம் ஆண்டில், பிரிட்டனின் காலணி மாநிலங்களின் தபால் அமைப்புகளுக்கு பிரிட்டன் பொறுப்பை ஏற்றது. 1964 ஆம் ஆண்டில் அரசாங்கத்திற்கு அஞ்சல் தலை உற்பத்திக்கான உரிமத்தை அமெரிக்க அஞ்சல் தலை தொழில்முனைவோரான ஃபின்கேர் கென்னி அஜ்மானுடன் ஒரு ஒப்பந்தம் செய்தார்.பின்னர் இது போன்ற ஒப்பந்தங்களை புஜைரா ஆட்சியாளரிடமும் செய்தார்.[2]
- ↑ Wilson, Graeme (2010). Rashid, Portrait of a Ruler. UAE: Media Prima. pp. 68–71. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789948152880.
- ↑ "Agreement between Mohammed Al Sharqi & Finbar Kenny". Oh My Gosh. பார்க்கப்பட்ட நாள் 1 November 2014.