மனித உரிமைகள் நோக்கிய விமர்சனங்கள்
மனித உரிமைகள் தொடர்பாக பல்வேறு வழிகளில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. விலை பயன் நோக்கில், வரலாற்று நோக்கில், சமய நோக்கில், உள்ளடக்க நோக்கில் என பல பார்வைகளில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. பின்வருவன அவற்றின் சுருக்கங்கள் ஆகும்.
கொள்கை வெளிப்பாடுகளும் நடைமுறையும்
தொகுஉலகின் பெரும்பால நாடுகள் மனித உரிமைகளுக்கு சார்பான சான்றுரைகளை, உடன்படிக்கைகளை, கொள்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால் பல நாடுகளில் இவற்றை நிறைவேற்றதக்க நிர்பந்தங்களோ, சூழ்நிலைகளோ இல்லை. இதனால் கருத்திய மனித உரிமைகளுக்கும், நடைமுறையில் மனித உரிமைகளுக்கும் பாரிய வேறுபாடு உள்ளது.
பொருள் இழந்து போகும் விரிபு பெறும் உரிமைக் கோரிக்கைகள்
தொகுஅடிப்படை குடிசார் அரசியல் உரிமைகளில் இருந்து இன்று மூன்றாம், நான்காம் தலைமுறை உரிமைகள் என்று பல வகையான கோரிக்கைகள் உரிமைகள் என்ற போர்வையில் முன்வைக்கப்படுகின்றன. தகுந்த காதலருக்கான உரிமை, தகுந்த ஓய்வுக்கான உரிமை, தகுந்த நட்புக்காண உரிமை, வேக கட்டுப்பாட்டை மீற உரிமை போன்று உரிமைகளின் விரிவாக்கம் உரிமைகளை பொருள் இழக்க வைக்கிறது.[1]
மனித உரிமைகள் எதிர் மக்கள் உரிமைகள்
தொகுமனித உரிமைகள் பொதுவாக தனிமனித உரிமைகள் என்ற வடிவமைப்பிலேயே விபரிக்கப்படுகின்றன. எனினும் பல சூழ்நிலைகளில் ஒரு மக்கள் குழுவின் உரிமைகள் பற்றிப் பேசுவது அவசியமாகிறது. குறிப்பாக முதற்குடிமக்கள் உரிமைகள், சிறுபான்மை மக்கள் உரிமைகள் பற்றிப் பேசும் போது மனித உரிமைகள் ஒரு மக்கள் குழுவின் உரிமைகளாகப் பரிணாமிக்கின்றன. ஆனால் தற்போதைய மேற்குலக மனித உரிமைகள் வரையறைகள் இதை போதிய அளவு கருத்தில் கொள்ளவில்லை.
மனித உரிமைகளும் பண்பாட்டுச் சூழ்நிலைகளும்
தொகுமனித உரிமைகளின் வரையறைகள் பெரும்பாலும் மேற்குநாடுகளிலேயே வளர்ச்சி பெற்றன. இதனால் இசுலாமிய நாடுகள், சீனா போன்ற நாடுகள் இவை எல்லாம் தமக்குப் பொருந்தாது என்றும், மனித உரிமைகள் பற்றிய தமது வரையறைகள் தமது பண்பாட்டு அரசியல் சூழலில் இருந்து பெறப்படுதாகவும் வாதிக்கின்றன. குறிப்பாக இசுலாமிய மனித உரிமை அறிக்கைகளில் உறுதி செய்யப்படாத பெண்கள் சமவுரிமை, மற்றும் சீனாவில் உறுதி செய்யப்பட்டாத அரசியல் மற்றும் குடியல் உரிமைகளுக்கு இந்தக் காரணம் தரப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "The world has become man's right and everything in it has become a right: the desire for love the right to love, the desire for rest the right to rest, the desire for friendship the right to friendship, the desire to exceed the speed limit the right to speed limit..." - Milan Kundera