மனித உரிமைக் கல்வி

மனித உரிமைகள் கல்வி (Human rights education) என்பது ஒவ்வொரு தனி மனிதனுக்குமுள்ள உரிமைகள் குறித்த அறிவையும் சிறப்பையும் உருவாக்க முயலும் கல்விமுறையாகும். இந்தக் கல்வி, மாணவர்களுக்கு அவர்களது சொந்த அனுபவங்களைக் கொண்டு முடிவுகளை எடுக்கும் திறனை வளர்க்கவும் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சூழ்நிலைகளை எதிர்கொள்ளவும் சிறந்த விழுமியங்களைப் பெறவும் பயனுள்ளதாக இருக்கும்.[1] மக்கள் தங்கள் இனத்திலும், சமூகத்திலும் மேலும் உலகமெங்கிலும் கண்ணியத்துடனும் சமத்துவத்துடனும் வாழ்வதற்கான திறன்களை வளர்த்துக் கொள்ள இக்கல்விமுறை பயிற்சியளிக்கிறது.[2]

மனித உரிமை வகைகள்

தொகு
  1. குடிமையியல் உரிமைகள்
  2. அரசியல் உரிமைகள்
  3. பொருளாதார உரிமைகள்
  4. சமூக உரிமைகள்
  5. கலாச்சார உரிமைகள்

தனிமனிதருக்குரிய உரிமைகள்

தொகு
  1. குடிமை உரிமைகள்
  2. அரசியல் உரிமைகள்
  3. பொருளாதார,சமூக,பண்பாட்டு உரிமைகள்
  4. குழுக்களின் உரிமைகள்
  5. பெண்களுக்கான உரிமைகள்
  6. குழந்தைகள், இளங்குற்றவாளிகளுக்கான உரிமைகள்
  7. சிறைக்கைதிகளின் உரிமைகள்

பள்ளிகளில் மனித உரிமைக் கல்வி

தொகு

கல்வி வழி மனித உரிமைகள் மற்றும் கல்வியில் மனித உரிமைகள் போன்றவைகளை கற்பிப்பதற்கு தகுந்த சூழல் பள்ளிகளில் உருவாக்கப்பட வேண்டும்.பள்ளிகளில் மனித உரிமைக் கல்வியை உள்ளடக்குதல் வேண்டும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "WHAT is human rights education?". www.theadvocatesforhumanrights.org. பார்க்கப்பட்ட நாள் 2018-06-22.
  2. "Human Rights Education". www.amnesty.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-22.

ஆதாரங்கள்

தொகு
  • மனித உரிமைக் கல்வி -ஆசிரியர்களுக்கான கருத்து ஆதாரக் கையேடு (2005-2007), மனித உரிமைக் கல்வி நிறுவனம், மதுரை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனித_உரிமைக்_கல்வி&oldid=4052938" இலிருந்து மீள்விக்கப்பட்டது