மனித நூலகத் திட்டம்
நூற்களுக்குப் பதிலாக மனிதர்களை தெரிவு செய்து பகிர்தல்
மனித நூலகத் திட்டம் என்பது நூற்களுக்குப் பதிலாக மனிதர்களை தெரிவு செய்து பகிர்தல் ஆகும். நூற்களைப் போல, அல்லது நூற்களை விட கூடுதலான தகவல் அறிவு மனிதர்களிடம் இருக்கிறது. ஆகையால் மனிதர்களிடம் உரையாடி, பகிர்ந்து அறிவை வளர்க்க முடியும் என்ற கருத்தின் அடிப்படையில் அமைந்ததே மனித நூலகத் திட்டம் ஆகும். இது கனடா நாட்டின் ரொறன்ரோ நூலத் துறையால் தொடங்கப்பட்டுள்ளது. அரை மணி நேரத்திற்கு ஒரு மனிதரை நாம் தெரிவு செய்து, அவருடன் உரையாட முடியும்.