மனித விலங்கு

மனித விலங்கு என்பது மனிதனின் உயிரணுவையும் விலங்குகளின் கரு முட்டையையும் இணைத்து உருவாக்கப்படும் புதிய உயிரினங்களாகும். பிரித்தானிய விஞ்ஞானிகள் கடந்த 3 ஆண்டாக இந்த ஆராய்ச்சியினை வெளி உலகுக்குத் தெரிவிக்காமல் இதுவரை 150க்கும் மேற்பட்ட உயிரினங்களை உருவாக்கியுள்ளனர். இவ்வாறு உருவாக்கப்படும் உயிரினங்களிலிருந்து எடுக்கப்படும் மூல உயிரணுவை மனித உடலுக்குள் செலுத்தி, மனிதனுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட உறுப்புகளை உருப் பெறச் செய்வதுதான் இந்த ஆராய்ச்சியின் நோக்கம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இத்தகைய கலப்பு உயிரனங்களை உருவாக்குவது சட்டப்படி தவறு என்பதால், இவை உருவாக்கப்பட்ட 14 நாட்களுக்குள் அழிக்கப்படுவதாகவும் இந்த கண்டுபிடிப்பு மனிதனுக்கு ஏற்படும் கொடிய நோய்களைச் சரி செய்வதற்கு உதவும் என்றும் இந்த விஞ்ஞானிகள் குழுவின் தலைவர் பேராசிரியர் ராபின் லோவல் பாட்ஜ் என்பவர் தெரிவித்துள்ளார்.

ஆதாரம்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனித_விலங்கு&oldid=3925506" இலிருந்து மீள்விக்கப்பட்டது