மனுஷி பாரதி
மனுசி. பாரதி என்பவர் இளம் பெண்கவிஞர். யுவ புரஸ்கார் (இளம் சாகித்ய அகாதமி) என்னும் தேசிய அளவிலான விருதினை 2017 ஆம் ஆண்டில் பெற்றவர். இவரது படைப்பான ஆதிக் காதலின் நினைவுக்குறிப்புகள் என்னும் நூல் இவருக்கு இந்த விருதினைப் பெற்றுக் கொடுத்தது.[1].
வாழ்க்கைக் குறிப்பு
தொகுமனுசி. பாரதியின் இயற்பெயர் ஜெயபாரதி ஆகும். இவரது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம், திருநாவலூர். திருநாவலூரில் பள்ளிப் படிப்பையும் புதுச்சேரியில் கல்லூரிப் படிப்பையும் முடித்துவிட்டு, புதுச்சேரி பல்கலைகழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டார்.[2]
இதுவரை எழுதியுள்ள நூல்கள்
தொகு- குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள்-மித்ரா பதிப்பகம் (2013)
- முத்தங்களின் கடவுள்-உயிர்மை பதிப்பகம் (2014)
- ஆதிக் காதலின் நினைவுக்குறிப்புகள்-உயிர்மை பதிப்பகம் (2015)
பெற்றுள்ள விருதுகள்
தொகு- ""முத்தங்களின் கடவுள் நூலுக்காக சென்னை இலக்கியக் கழகத்தின் இளம் படைப்பாளி விருது
- "ஆதிக் காதலின் நினைவுக்குறிப்புகள்" என்னும் நூலுக்காக யுவ புரஸ்கார் என்னும் இளம் சாகித்ய அகாதமி விருது