மனு பிரகாஷ்

மனு பிரகாஷ், இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் உயிரிப்பொறியியல் துறை பேராசிரியராகப் பணி புரியும், விஞ்ஞானி ஆவார். மீரட் நகரில் பிறந்து வளர்ந்த இவர், 2002-ல் கான்பூர் ஐஐடியில், கணினி அறிவியலில் இளநிலை தொழில்நுட்பப் பட்டம் பெற்றார். இதன்பின், மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில், ஊடகக் கலை மற்றும் அறிவியலில், 2008-ல் முனைவர் பட்டம் பெற்றார்.[1] இவர் மடிப்புநோக்கி[2][3] மற்றும் காகித மையவிலக்கிக்காக[4] நன்கு அறியப்பட்டவர். இவரும் இவரது குழுவும், இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில், நீர்த்துளி அடிப்படையிலான கணினி ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்[5][6]. உலக மக்களிடையே மருத்துவம்,கணிப்பிடுதல் மற்றும் நுண் நோக்கியியல் ஆகியவற்றைக் கொண்டு சேர்க்கும் விதமான, சிக்கனமான புதுமைகள் மையப்படுத்தி இவரது வேலைபாடுகள் இருக்கிறது. 2016 ஆம் ஆண்டில் மெக்கார்தர் அறக்கட்டளை மதிப்புறு நபர் என்ற சிறப்பு இவருக்குக் கிடைத்தது.[7]

மனு பிரகாஷ்
பிறப்புமீரட், இந்தியா
வாழிடம்ஐக்கிய அமெரிக்கா
துறைஉயிரிப்பொறியியல்
பணியிடங்கள்இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்
கல்வி
அறியப்படுவதுமடிப்புநோக்கி, காகித மையவிலக்கி

மேற்கோள்கள்

தொகு
  1. https://www.iitk.ac.in/dora/manu-prakash
  2. http://stanford.edu/~manup/docs/Cybulski_PLoSONE_2014.pdf
  3. "A Microscope to Save the World". The New Yorker. பார்க்கப்பட்ட நாள் 2016-09-26.
  4. "The Paperfuge: A 20-Cent Device That Could Transform Health Care". Wired. பார்க்கப்பட்ட நாள் 2017-01-10.
  5. https://www.youtube.com/watch?v=m5WodTppevo
  6. http://stanford.edu/~manup/docs/Katsikis2015-NaturePhysics.pdf
  7. https://www.macfound.org/fellows/965/
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனு_பிரகாஷ்&oldid=2936129" இலிருந்து மீள்விக்கப்பட்டது