மனையியல்
மனையியல் அல்லது மனை அறிவியல் என்பது வீடு, குடும்பம், வாழ்வியல் தொடர்பான பல்வேறு கூறுகளுக்கான ஒரு கல்வித் துறை ஆகும். இது சமூக மற்றும் பெளதீக அறிவியல்களில் இருந்து பல்வேறு விடயங்களை உள்ளடக்கியது. மேற்குநாடுகளில் இது வீட்டுப் பொருளியல் (home economics) அல்லது family and consumer science (வீட்டு மற்றும் நுகர்வு அறிவியல்) அல்லத வீட்டுச் சூழலியல் (home ecology) என்றும் அறியப்படுகிறது.
வரலாறு
தொகுநெடுங்காலமாக உயர் கல்வி ஆண்களுக்கு மட்டுமானதாக மட்டும் இருந்து வந்தது. இந்த நிலை 1850 களின் பின்பு ஐக்கிய அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட நில-அன்பளிப்பு பல்கலைக்கழகங்களால் (Land-grant university) மாற்றப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகங்கள் மரபுவழியில் அளிக்கப்பட்டு வந்த லிபிரல் ஆட்சு (liberal arts) கல்வித்துறைகளைத் தாண்டி வேளாண்மை, அறிவியல், பொறியியல், படைத்துறையியல் ஆகிய தொழில்சார், திறன்சார் துறைகளில் (hands on and skill based practices) உயர் கல்வி வழங்கின. இவை பெண்கள் கல்விபெறவும் வாய்ப்புக்களைக் கொடுத்தன. இந்தப் பல்கலைக்கழகங்களில் பெண்களுக்கு கைத்தொழிற்கலைகளை, திறன்களைக் கற்பிக்கவென உருவாக்கப்பட்ட துறையே மனையியல் துறை ஆகும்.[1] இந்தத் துறை வீட்டையும் குடும்பத்தையும் மேலாண்மை செய்ய அறிவியல் நோக்கிலான கல்வியை வழங்குவதை நோக்கக் கொண்டு தொடங்கப்பட்டது.[1] அன்றைய சமூக-கல்வி-பொருளாதாரச் சூழலில் மனையியல் துறையின் உருவாக்கம் முற்போக்கான ஒரு மாற்றம் ஆகும். பெண்கள் கல்வி, அரசு, தொழிற் துறைகளுக்கு பெருமளவில் வர இத் துறை அடித்தளம் இட்டது.[2] பிற்காலத்தில் இது ஆண், பெண் இருபாலருக்குமான அடித்தள அறிவுகளையும் திறன்களையும் கொண்ட ஒரு கல்வித்துறையாக மாற்றம்பெற்றது.
இந்தியாவில் 1920 களுக்குப் பின்னரே மனையியல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1938 ஆம் ஆண்டு செனைப் பல்கலைக்கழத்தில் மனை அறிவியல் இளநிலைப் பட்டப் படிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டது. இராஜம்மாள். பி. தேவதாஸ் அவர்களின் முயற்சியால் பள்ளியில் இருந்து பல்கலைக்கழகம் வரை பல உட்பிரிவுகளுடான ஒரு துறையாக விரிவுபெற்றது.[3] இன்று தமிழ்நாட்டுக் கல்வித்திட்டத்தின் ஒரு முக்கிய பாடமாக மனை அறிவியல் அமைகிறது.
உற்பத்திக்கான தளமாக வீடு
தொகுவீட்டுத் தோட்டம், கோழி,ஆடு,மாடு வளர்த்தல், சமைத்தல், தைத்தல், தோய்த்தல், பின்னுதல், வீடு திருத்தல், கைத்தொழில்கள், குழந்தை வளர்ப்பு/பராமரிப்பு, குழந்தைகள் கல்வி, போக்குவரத்துச் சேவைகள் என பல உற்பத்திச் செயற்பாடுகள் வீடு சார்ந்தே நடைபெற்றன, நடைபெறுகின்றன. இதனை முறைப்படி ஆயும் ஒரு துறையாக உருவாகியதே மனைப் பொருளியல் துறை. ஒரு வீட்டை, குடும்பத்தை சிறப்பாக மேலாண்மை செய்ய பல்வேறு அறிவுகள் தேவைப்படுகிறன. அவ்வாறான முதலுதவி, ஊட்டச்சத்து, சுகாதாரம் (hygiene), நிதி மேலாண்மை போன்ற பல்வேறு உட்பிரிவுகளைச் சேர்த்து இது விரிவானது.
பல்வேறு சமூக சூழலியல் தாக்கங்களும் வீடு சார்ந்தே அமைகின்றன. எ.கா ஒரு கனடிய வீடு 4000 இராத்தல்கள் கழிவுகளை உற்பத்தி செய்கிறது.[4] கூட்டுக் குடும்பங்களைக் கொண்ட வீடுகள், தனிக் குடும்ப வீடுகளாகவும், மேற்குநாடுகளில் தனிநபர் வீடுகளாகவும் மாறி உள்ளன. இத்தகைய மாற்றங்களிலும் மனையியல் துறை அக்கறை கொண்டுள்ளது.
அண்மைக் காலமாக வீடுசார் உற்பத்தி குறைந்துள்ளது. பல தரப்பட்ட தேவைகளுக்கும் வெளிச் சந்தையை அல்லது நுகர்வை தங்கி இருக்கும் போக்கு அதிகரித்துள்ளது. இது மனையியல் துறையைப் பெருமளவில் பாதித்துள்ளது. குறிப்பாக உணவு உற்பத்தி, சமைத்தல், தைத்தல், கைத்தொழில்கள் போன்ற அடிப்படை திறன்கள் அடிப்படையிலான கல்வியில் இருந்து நுகர்வுக்கு உதவும் வகையிலான கல்விக்கு இது பல இடங்களில் நகர்ந்துள்ளது. [5]
உள்ளடக்கம்
தொகு- உறவுகள்
- மனித உறவுத் திறமைகள் / interpersonal skills
- குடும்ப மேலாண்மை
- உணவு
- உற்பத்தி
- சமைத்தல்
- பாதுகாத்தல்
- ஊட்டச்சத்து
- உடை
- துணி
- தைத்தல்
- தோய்த்தல்
- வீடு
- பராமரித்தல்
- துப்பரவாக்கல்
- திருத்தல்
- உட்புற வடிவமைப்பு/அழகியல்
- தொழிற்கலைகள்
- பின்னல்
- மரவேலை
- soap making
- பொருளாதாரம்/நிதி மேலாண்மை
- வரவு செலவு
- கைத்தொழில்
- நுகர்வோர் உரிமைகள்
- நலம்
- முதலுதவி
- உடல் தூய்மை
- பாலியல் கல்வி
- போக்குவரத்து
- வண்டி திருத்தல்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 A Brief History of how Home Economics Came to Be
- ↑ What Was Home Economics?
- ↑ "மனை அறிவியல் - ஆண்டு 11" (PDF). Archived from the original (PDF) on 2014-09-14. பார்க்கப்பட்ட நாள் 2014-02-09.
- ↑ What Happened to Home Economics? An Essay on Households, the Economy and the Environment
- ↑ Carolyn M. Goldstein (2012). Creating Consumers: Home Economists in Twentieth-Century America]