மனோன்மணி (எழுத்தாளர்)
இது மனோன்மணி எழுத்தாளரைப் பற்றிய கட்டுரை. மனோன்மணி திரைப்படம் குறித்து படிக்க மனோன்மணி (திரைப்படம்)
மனோன்மணி என்றழைக்கப்படும் சுகவன முருகன் தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்தவர். [1]சவுளூர் நடுநிலைப்பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றியவர்.
பல்துறை
தொகுஇவர் சிற்றிதழ் ஆசிரியர், பதிப்பாளர், தொல்லியல் ஆர்வலர், கவிஞர் என்று பல பரிமாணங்களைக் கொண்டவர் ஆவார். [2] கவிதைகள், கட்டுரைகள் எழுதி வரும் இவர் ஒரு வரலாற்று ஆய்வாளரும் ஆவார். [1] வரலாற்று ஆய்வுகளில் மிகுந்த அக்கறை கொண்டவர்.[3]
சிறப்புகள்
தொகு‘புது எழுத்து’ சிற்றிதழ் மூலம் சிறப்பான காத்திரமான பங்களிப்புகளைச் செய்தவர். தொல்லியல் தொடர்பாக ‘சாசனம்’ என்ற இதழை நடத்திவருகிறார். [2]
முதல் சிற்றிதழ் விருது
தொகுதமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் வகையில் ஏற்படுத்திய சிற்றிதழுக்கான முதல் விருதை புது எழுத்து பெற்றது. இதில் பரிசுத்தொகை ரூ.1.5 இலட்சமும் பாராட்டுப் பத்திரமும் அடங்கும். நோபல் பரிசு பெற்ற நூற்றாண்டுக் காலத் தனிமை என்னும் புதினம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, புது எழுத்து இதழில் தொடராக வெளிவந்ததைப் பாராட்டி இவ்விருது வழங்கப்பெற்றது. இவ்விதழில் மலையாளக் கவிஞர் ஏ.அய்யப்பனின் கதைத்தொகுப்பு முதலில் தமிழில் வெளியானது. தகடூர் என்னும் அரிய வரலாற்று நூல் மீள் பதிப்பு, கிருஷ்ணதேவராயர் காலத்தில் நூனிஸ் என்ற போர்த்துக்கீசிய வணிகர் தமிழகத்திற்கு வருகை புரிந்ததை பயண நூலாக வெளியிட்டமை உள்ளிட்ட பல சிறப்புகளைக்ள கொண்டது இவ்விதழ்.[1]
சோதனை முயற்சிகள்
தொகுபுது எழுத்து[4] இதழின் சோதனை முயற்சிகளாக நகுலனின் அந்த 'மஞ்சள் நிறப் பூனைக்குட்டி' குறும்புதினம், வெங்கடேசனின் நீள்கதைகள், ஜோஸ் அன்றாயன் கதைகள், ஸ்ரீநேசன், கண்டராதித்தன், சபரிநாதன், மனோமோகன் கவிதைகள், மொழிபெயர்ப்பு இணைப்பிதழ்கள், குறிப்பாக காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் 'முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம்', சரமாகோவின் 'அறியப்படாத தீவின் கதை' போன்றவற்றின் மொழிபெயர்ப்புகள் போன்றவை ஆகும். சென்னையிலுள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் புது எழுத்து இதழ்களை முழுமையாக டிஜிட்டலாக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. பொதுமைப்படுத்தப்பட்ட ‘புது எழுத்து’ இதழ்களை இலவசமாகத் தரவிறக்கம் செய்து படிக்க இம்முயற்சி உதவிபுரியும். [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 கிருஷ்ணகிரி எழுத்தாளருக்கு முதல் சிற்றிதழ் விருது, தினமணி, 23 பிப்ரவரி 2011
- ↑ 2.0 2.1 2.2 புத்தகத் திருவிழா 2022, புதிய பரிமாணத்தில் புதிய எழுத்து சிற்றிதழ், மனோன்மணி பேட்டி, இந்து தமிழ் திசை, 26 பிப்ரவரி 2022
- ↑ ரூ.1.5 லட்சம் சிறு தொகைதான்! இந்து தமிழ் திசை, 29 பிப்ரவரி 2020
- ↑ புது எழுத்து : நவீன படைப்பிலக்கியத்திற்கான சிறுபத்திரிகை / மனோன்மணி
வெளியிணைப்புகள்
தொகு- லஞ்சம் வாங்கினாலும் கொடுத்தாலும் மரண தண்டனை விதித்த மன்னன்: 700 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டில் தகவல், இந்து தமிழ் திசை, 10 அக்டோபர் 2014
- அருகே சாலையோரம் தங்கக்காசுகள் கண்டெடுப்பு: புதையல் தேடி பொதுமக்கள் குவிந்தனர், இந்து தமிழ் திசை, 10 அக்டோபர் 2014
- கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறைக் கீறல் ஓவியங்கள் கண்டுபிடிப்பு, இந்து தமிழ் திசை, 3 டிசம்பர் 2016
- தேன்கனிக்கோட்டை அருகே 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புதிய கற்கால கருவிகளை கூர் தீட்டும் போது ஏற்பட்ட குழிகள் தொல்லியல் ஆய்வாளர்கள் தகவல், இந்து தமிழ் திசை, 21 பிப்ரவரி 2021