மனௌரியா
மனௌரியா | |
---|---|
மனௌரியா எமிசு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | மனௌரியா கிரே, 1854
|
மனௌரியா (Manouria) என்பது டெசுடூடினிடே குடும்பத்தைச் சேர்ந்த ஆமைகளின் பேரினம் ஆகும். இந்த பேரினம் 1854ஆம் ஆண்டில் ஜான் எட்வர்ட் கிரே என்பவரால் உருவாக்கப்பட்டது.
சிற்றினங்கள்
தொகுபின்வரும் ஐந்து சிற்றினங்கள் செல்லுபடியாகும் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் இரண்டு தற்பொழுது உயிருடன் உள்ளன. மற்றவை (மூன்று) அழிந்துவிட்டன
படம் | பொதுவான பெயர் | அறிவியல் பெயர் | பரவல் |
---|---|---|---|
ஆசிய காட்டு ஆமை | மனௌரியா எமிசு (செக்லெகல் & எசு. முல்லர், 1844) | வங்காளதேசம், கம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் | |
ஈர்ப்பு ஆமை | மனௌரியா இம்ப்ரேசா (குந்தர், 1882) | மியான்மர், தெற்கு சீனா, தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம், கம்போடியா, மலேசியா மற்றும் வடகிழக்கு இந்தியா |
- † மனௌரியா சோண்டாரி கார்ல் & ஸ்டேஷ், 2007-பிலிப்பீன்சு லுசோன் தீவிலிருந்து ஒரு மாபெரும் நில ஆமை இருப்பினும், ரோடின் மற்றும் பலர் (2015) இந்த இனத்தை மெகாலோசெலிசு என்ற பேரினத்திற்கு மாற்றினர்.[1][2]
- † மனௌரியா பஞ்சாபியென்சிசு (லைடெக்கர், 1889) -இந்தியாவின் சிவாலிக்சிலிருந்து வந்த ஒரு புதைபடிவ ஆமை [2]
- † மனௌரியா ஒயாமாய் தக்காகாசி, ஒட்சுகா & கிரயாமா, 2003-சப்பானின் ரியுக்யு தீவுகளில் இருந்து ஒரு புதைபடிவ ஆமை [2]
குறிப்பு: அடைப்புக்குறிக்குள் இருசொற் பெயரீடு இந்த சிற்றினம் முதலில் மனோரியாவைத் தவிர வேறு ஒரு பேரினத்தில் விவரிக்கப்பட்டதைக் குறிக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Staesche, Ulrich (coordinator) (2007). Fossile Schildkröten aus vier Ländern in drei Kontinenten: Deutschland, Türkei, Niger, Philippen [= Fossil Turtles from Four Countries on Three Continents: Germany, Turkey, Niger, and the Philippines]. Geologisches Jahrbuch, Reihe B, Heft 98 [= Series B, Issue 98]. 197 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-510-95967-9. http://www.schweizerbart.de/publications/detail/artno/186029800 (in German).
- ↑ 2.0 2.1 2.2 Anders G.J. Rhodin; Scott Thomson; Georgios L. Georgalis; Hans-Volker Karl; Igor G. Danilov; Akio Takahashi; Marcelo S. de la Fuente; Jason R. Bourque et al. (2015). "Turtles and Tortoises of the World During the Rise and Global Spread of Humanity: First Checklist and Review of Extinct Pleistocene and Holocene Chelonians". Chelonian Research Monographs 5 (8): 000e.1–66. doi:10.3854/crm.5.000e.fossil.checklist.v1.2015. https://iris.unito.it/bitstream/2318/1637061/1/Rhodin%20et%20at.%2c%20TEWG%2c%202015%20-%20Copia.pdf.
மேலும் வாசிக்க
தொகுJohn Edward Gray. (1854). "Description of a New Genus and some New Species of Tortoises". Proceedings of the Zoological Society of London. 1852: 133–135. (Manouria, new genus, p. 133).