மன்சுதே கலைக் குழு

மன்சுதே கலைக்குழு (Mansudae Art Troupe) என்பது வட கொரிய இசைக் கலைஞர்களின் குழுவாகும். இது இசைக்கூத்துகளையும் இசையையும் நடனச் சுற்றுகளையும் நிகழ்த்துகிறது.[1][2][3]

மன்சுதே கலைக் குழு
Hangul만수대예술단
Hanja萬壽臺藝術團
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல்மன்சுதே யேசுல்தான்
McCune–Reischauerமன்சுதே யேசுல்தான்

இது 1969 செப்டம்பர் 27 இல் உருவாகிய நடுவண் கலைக் குழுவின் வழித்தோன்றலாக்க் கருதப்படுகிறது. ஆனால், கொரிய நடுவண் செய்தி முகமையின்படி, "இதன் முன்னமைப்பு பியோங்யாங் கலைக் குழு ஆகும். இது வட கொரிய நாட்காட்டியின்படி யூச்சே 35 இல்(1946) உருவாகியது".

மன்சுதே கலைக் குழு உலகின் 50 நாடுகளில் முற்போக்கு மக்களின் நட்புறவாகச் சென்று 700 தடவைக்கும் மேலாக கலை நிகழ்ச்சிகளை நட்த்தியுள்ளது. இது கொரியப் புரட்சி இசைக்கூத்தான பூக்காரச் சிறுமி (1972) உருவாக்குவதில் முதன்மையான பாத்திரம் வகித்துள்ளது இதை மேலும் 1,300 தடவை நடத்தியுள்ளது. இக்குழு "துறக்கப் பாடல் (Song of Paradise)" (1976) 340 முறை பாடியுள்ளது.

இக்குழு 1500 பாடல்களையும் 500 கருவியிசைக் கோவைகளையும் உருவாக்கியுள்ளது. இது கிம் Il-சங் ஆணை விருதை 1972 இல் பெற்றுள்ளது.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Mackay, Emily (2018-01-24). "6 extraordinary facts about music in North Korea; There's an opera character on a North Korean bank note". BBC Music (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-01-30.
  2. Lim, Jae-Cheon (2009). "Road to heir (1964-1974)". Kim Jong-il's Leadership of North Korea. United Kingdom: Routledge. p. 44. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-203-88472-0.
  3. "North Korea - Postage stamps - 1973 - Mansudae Art Troupe Dances". Stamp World. 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-01-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்சுதே_கலைக்_குழு&oldid=4101751" இலிருந்து மீள்விக்கப்பட்டது