மன்சூர் பராமி

மன்சூர் பராமி [(Mansour Bahrami), (26 ஏப்ரல், 1956)] என்பவர் ஓய்வுபெற்ற டென்னிஸ் வீரராவார். வலக்கை டென்னிஸ் விளையாட்டு வீரரான இவர் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர். இவர் இரட்டைக் குடியுரிமையாய் பிரான்ஸ் நாட்டின் குடியுரிமையையும் 1989 முதல் கொண்டிருந்தார். 1989 ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓப்பன் இரட்டையர் பிரிவில் இறுதிப் போட்டியில் விளையாடினார்.[1] 1988 ஆம் ஆண்டின் ஜெனீவா ஓப்பன் இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்றார். இவர் அவரது தந்திரோபாய விளையாட்டு முறையால் மிகவும் பிரபலமானார். 1974 முதல் தொழில்முறை ரீதியாக டென்னிஸ் விளையாடத் தொடங்கிய இவர் 2003 ஆம் ஆண்டில் டென்னில் விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற்றார்.

மன்சூர் பராமி
மன்சூர் பராமி

போட்டி விபரம்

தொகு
விபரம்
கிராண்ட் ஸ்லாம் (0-1)
டென்னிஸ் மாஸ்டர்ஸ் கோப்பை (0-0)
ஏடிபி மாஸ்டர்ஸ் வரிசை (0-2)
ஏடிபி டூர் (2-7)

விளையாட்டு வாழ்க்கை

தொகு

ஈரானிய நாட்டில் டென்னில் விளையாட போதுமான வீரர்கள் இல்லாதபோது இவர் விளையாடத் தேர்தெடுக்கப்பட்டார். தனது 16 ஆம் வயதில் டேவிஸ் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் விளையாடி அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார். ஆனால் 1970 களில் ஏற்பட்ட ஈரானியப் புரட்சியின் காரணமாய் இவரது விளையாட்டு பாதிக்கப்பட்டது. இதன் காரணமாய் இவர் பிரான்சு நாட்டிற்குப் புலம் பெயர்ந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. MacDonald, Geoff (30 January 2010). "Islamic Republic Crushed the Dreams of Iran’s Top Tennis Players". New York Times. https://www.nytimes.com/2010/01/31/sports/tenniami.html?_r=0. பார்த்த நாள்: 7 June 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்சூர்_பராமி&oldid=2715617" இலிருந்து மீள்விக்கப்பட்டது