மன்னார்குடி வட்டம்

மன்னார்குடி வட்டம் , தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக மன்னார்குடி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 115 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]இவ்வட்டத்தில் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம் மற்றும் மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 308,380 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 152,664 ஆண்களும், 155,716 பெண்களும் உள்ளனர். 80,740 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 78.3% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 81.77% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,020 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் 27791 எண்ணிக்கை ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 942 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 80,869 மற்றும் 1027 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 95.15%, இசுலாமியர்கள் 2.34%, கிறித்தவர்கள் 2.33% மற்றும் பிறர் 0.10%ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்னார்குடி_வட்டம்&oldid=2725761" இலிருந்து மீள்விக்கப்பட்டது