மன்னார் கத்தோலிக்கர் படுகொலைகள்
மன்னார் கத்தோலிக்கர் படுகொலைகள் எனப்படுவது 16 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்து முதலாம் சங்கிலி மன்னாரில் போத்துக்கீசரின் தூண்டலால் கிறித்தவ சமயத்துக்கு மாறிய நூற்றுக் கணக்கான, பெரும்பாலும் பரதவர் சமூகத்தவரை படுகொலை செய்த நிகழ்வாகும். இந்தப் படுகொலைகளில் சுமார் 600 – 700 பேர் கொல்லப்பட்டார்கள்.[1][2]
மன்னார் கத்தோலிக்கர் படுகொலைகள் | |
---|---|
இடம் | மன்னார் மாவட்டம், இலங்கை |
நாள் | 1544 |
தாக்குதலுக்கு உள்ளானோர் | மன்னார் கத்தோலிக்கர் |
தாக்குதல் வகை | வெட்டுதல் |
ஆயுதம் | வாள் |
இறப்பு(கள்) | 600 - 700 |
தாக்கியோர் | முதலாம் சங்கிலி |
இந்தப் படுகொலைகளுக்குப் பின்னர் சமய, அரசியல், காலனித்துவ எதிர்ப்பு காரணங்கள் இருந்தன.