மன்னார் முன்னகர்வு முறியடிப்புச் சமர், பெப்ரவரி 2008
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மன்னார் மாவட்டம், அடம்பன் பகுதியினை ஆக்கிரமிக்க பாலைக்குழி வழியே செவ்வாய்க்கிழமை பெப்ரவரி 12 ஆம் திகதி 2008 ஆம் ஆண்டு காலை இலங்கை இராணுவத்தினரால் முன்னகர்வொன்று நடத்தப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை முதல் மதியம் 12:30 வரை முன்னேற முயன்ற இலங்கை இராணுவத்தினரில் 20 படையினர் கொல்லப்பட்டனர். மீண்டும் பாலைக்குழி ஊடாக 1:30 மணியளவில் முன்னேற முயன்ற படையினரை மரங்களற்ற வெளியினூடாக உள்வாங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் மாலை 4:30 முதல் 6:00 மணி வரை சுற்றிவளைத்துத் தாக்குதல் நடத்தினர். தமிழீழ விடுதலைப் புலிகளின் குறிசூட்டுத் தாக்குதல் அணியினர் சுட்டதில் 22 இலங்கை இராணுவத்தினர் உயிரழந்தனர் 53 ற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினர் இம்முன்னகர்வுச் சமரில் காயமடைந்தனர் என தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இச்சமரை முறியடிக்கும் விதமாக தள்ளாடிப் படை முகாம் மீது ஆட்லறித் தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.