மன சுரப்பி (Mental gland) என்பது பல வகையான நீர்நில வாழ்வன மற்றும் ஊர்வனவற்றில் காணப்படும் உடலின் ஒரு பகுதியாகும். மனச் சுரப்பிகள் இரசாயனங்களை உற்பத்தி செய்கின்றன, இவை விலங்குகளைத் தொடர்பு கொள்ளப் பயன்படுத்துகின்றன.[1][2]

அமைவிடம்

தொகு

மனச் சுரப்பிகள் தலையின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒன்றாக ஓர் இணையாக உள்ளன. இவை கீழ்த்தாடையின் முடிவில் அமைந்துள்ளன.[1][3]

செயல்கள்

தொகு

மனச் சுரப்பிகள் தோல் வழியாகச் சுரக்கும் இயக்குநீரை உற்பத்தி செய்கின்றன. மன சுரப்பிகளில் இருந்து வெளியேறும் சுரப்புகள் இணையைத் தேர்வு செய்தல், இனங்களை அடையாளம் காணுதல் மற்றும் பிற செயல்பாடுகளில் உட்படுத்தப்பட்டுள்ளன.[1][3][4]

ஆமைகள் தங்கள் இனத்தைச் சேர்ந்த மற்றொரு உறுப்பினரை சந்திக்கும் போது தலையை அசைக்கும் நடத்தை மன சுரப்பிகளின் வேதிப்பொருட்கள் மூலம் நடைபெறுகிறது என ஆய்வாளர்கள் நம்ப்புகின்றனர். காற்றின் மூலம் இந்தப் பொருட்கள் சிதறடிக்கப்பட்டு இன்னொரு உயிரியினை அடைகிறது.[1] சாலமண்டர்களில் சில இணை கூட நடைபெறும் காதல் நடத்தைகள் மன சுரப்பிகளின் செயல்பாடுகள் காரணமாக நடைபெறுகிறது.[2]

தோற்றம் மற்றும் பரிணாமம்

தொகு

அனைத்து ஊர்வன மற்றும் நீர்நில வாழ்வனவற்றில் மன சுரப்பிகள் இல்லை. ஒரே குடும்பத்தில் உள்ள சில சிற்றினங்கள் மட்டுமே மன சுரப்பிகளைக் கொண்டுள்ளன.[1][2]

2021ஆம் ஆண்டில், ஆய்வாளர்கள் குழு ஒன்று மன சுரப்பிகளைக் கொண்ட பெரும்பாலான ஆமைகள் நீர்வாழ்வைக் கொண்டுள்ளன எனக் கண்டறிந்தது. டெசுடுடினாய்டியா குடும்பத்தின் மூதாதையரான ஆமைகளில் ஒருமுறை மனச் சுரப்பிகள் உருவாகின்றன என்றும், மனச் சுரப்பிகளைக் கொண்ட அனைத்து ஆமைகளும் ஒரேவிதமான தோற்றம் கொண்ட திசுக்களிலிருந்து உருவாகின்றன என்றும் இவர்கள் முடிவு செய்தனர். மன சுரப்பிகள் இல்லாத ஆமைகள் அவற்றை நாளடைவில் பரிணாம வளர்ச்சியின் போது இழந்துவிட்டதாக ஊகித்தனர்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Alejandro Ibáñez; Uwe Fritz; Markus Auer; Albert Martínez-Silvestre; Peter Praschag; Emilia Załugowicz; Dagmara Podkowa; Maciej Pabijan (May 17, 2021). "Evolutionary history of mental glands in turtles reveals a single origin in an aquatic ancestor and recurrent losses independent of macrohabitat". Scientific Reports 11 (10396): 10396. doi:10.1038/s41598-021-89520-w. பப்மெட்:34001926. Bibcode: 2021NatSR..1110396I. 
  2. 2.0 2.1 2.2 David M. Sever; Dustin S. Siegel; Michael S. Taylor; Christopher K. Beachy1 (March 17, 2016). "Phylogeny of Mental Glands, Revisited". Copeia 104 (1): 83–93. doi:10.1643/CH-14-210. பப்மெட்:30034038. 
  3. 3.0 3.1 David M. Sever (January 18, 2016). "Ultrastructure of the mental gland of the Red-Backed Salamander, Plethodon cinereus (Amphibia: Plethodontidae)". Acta Zoologica 98 (2): 154–162. doi:10.1111/azo.12158. https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1111/azo.12158. பார்த்த நாள்: July 5, 2022. 
  4. Ariana E. Rupp; David M. Sever (February 14, 2017). "Histology of mental and caudal courtship glands in three genera of plethodontid salamanders (Amphibia: Plethodontidae)". Acta Zoologica (Royal Swedish Academy of Sciences) 98 (2): 154–162. doi:10.1111/azo.12188. http://www2.southeastern.edu/Academics/Faculty/dsever/RuppSever2018.pdf. பார்த்த நாள்: July 5, 2022. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன_சுரப்பி&oldid=4108740" இலிருந்து மீள்விக்கப்பட்டது