மயக்க நிலை
மயக்க நிலை என்பது ஒருவர் தன்னுணர்வு இல்லாமல் இருக்கும் நிலையைக் குறிப்பிடுகிறது. ஆங்கில வழி மருத்துவத்தில் (அலோபதி மருத்துவம்) அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையிலுள்ள நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது அதற்கான வலி, வேதனை தெரியாமல் இருப்பதற்காக அவர்கள் மயக்க நிலைக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர். இந்த மயக்க நிலைக்குக் கொண்டு செல்வதற்கென தனிப்பயிற்சி பெற்ற மருத்துவர்கள் உள்ளனர்.