மயங்கொலிச் சொற்கள்

மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில் கிட்டத்தட்ட ஒன்றே போன்ற ஒலிப்பினைக் கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள் கொண்டவைகளாகவும் காணப்படும். இவ்வகையான சொற்கள் ஒலிப்பின் போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க வைப்பவைகளாக இருக்கும். அதனாலேயே இவை மயங்கொலிச் சொற்கள் என்றழைக்கப்படுகின்றன.

உச்சரிப்பு முறைகள்

தொகு

ல-ள ஒலிப்பு முறை

தொகு

'ல' என்ற எழுத்தை மேல்நோக்கிய 'லகரம்' என அழைக்கிறோம். இவ்வெழுத்தை ஒலிக்கும் போது நுனிநாக்கு முன்பல்வரிசைக்கு மேல் உள்ள அண்ணத்தழைக்கிறோம். இவ்வெழுத்தை ஒலிக்கும் போது நாக்கு மேலண்ணத்தின் மையப்பகுதியைத் தொட்டு ஒலிக்க வேண்டும். 'ழகரமும்' 'ளகரமும்' ஒரே இடத்தில் நாக்கைத் தொட்டு உச்சரிப்பதால் ஒலிக்கப்படுகின்றன.

ண-ந-ன ஒலிப்பு முறை

'ண' என்ற எழுத்தை 'டண்ணகரம்' என அழைக்கிறோம். இவ்வெழுத்தை ஒலிக்கும் போது நாக்கு மேலண்ணத்தின் மையப்பகுதியைத் தொட்டு ஒலிக்க வேண்டும். 'டகரமும்' 'ணகரமும்' ஒரே இடத்தில் நாக்கைத் தொட்டு உச்சரிப்பதால் ஒலிக்கப்படுகின்றன.

'ந' என்ற எழுத்தை 'தந்நகரம்' என அழைக்கிறோம். இவ்வெழுத்தை ஒலிக்கும் போது நாக்கு அண்பல்லைத்தொட்டு ஒலிக்க வேண்டும். 'தகரமும்' 'நகரமும்' ஒரே இடத்தில் நாக்கைத் தொட்டு உச்சரிப்பதால் ஒலிக்கப்படுகின்றன.

'ன' என்ற எழுத்தை 'றன்னகரம்' என அழைக்கிறோம். இவ்வெழுத்தை ஒலிக்கும் போது நாக்கு மேலண்ணத்தின் நடுப்பகுதியைத் தொட்டு ஒலிக்க வேண்டும். 'றகரமும்' 'னகரமும்' ஒரே இடத்தில் நாக்கைத் தொட்டு உச்சரிப்பதால் ஒலிக்கப்படுகின்றன.

ர-ற ஒலிப்பு முறை

தொகு

'ர' என்ற எழுத்தை இடையின 'ரகரம்' என அழைக்கிறோம். இவ்வெழுத்தை ஒலிக்கும் போது நாக்கு மேலண்ணத்தைத் தொட்டு வருடுவதால் ஒலிக்கலாம்.

'ற' என்ற எழுத்தை வல்லின 'றகரம்' என அழைக்கிறோம். இவ்வெழுத்தை ஒலிக்கும் போது நாக்கு மேலண்ணத்தின் மையப்பகுதியை உரசுவதால் ஒலிக்கலாம்.

தமிழில் உள்ள மயங்கொலிச் சொற்கள்

தொகு

பொருள் வேறுபாடு

தொகு
  • அணல் - தாடி, கழுத்து
  • அனல் - நெருப்பு
  • அணி - அழகு
  • அனி - நெற்பொறி
  • அணு - நுண்மை
  • அனு - தாடை, அற்பம்
  • அணுக்கம் - அண்டை, அண்மை.
  • அனுக்கம் - வருத்தம், அச்சம்
  • அணை - படுக்கை, அணைத்துக் கொள்ளுதல்
  • அனை - அன்னை, மீன்
  • அணைய - சேர, அடைய
  • அனைய - அத்தகைய
  • அண்மை - அருகில்
  • அன்மை - தீமை, அல்ல
  • அங்கண் - அவ்விடம்
  • அங்கன் - மகன்
  • அண்ணம் - மேல்வாய்
  • அன்னம் - சோறு, அன்னப்பறவை
  • அண்ணன் - தமையன்
  • அன்னன் - அத்தகையவன்
  • அவண் - அவ்வாறு
  • அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன்
  • ஆணகம் - சுரை
  • ஆனகம் - துந்துபி
  • ஆணம் - பற்றுக்கோடு
  • ஆனம் - தெப்பம், கள்
  • ஆணி - எழுத்தாணி, இரும்பாணி
  • ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று
  • ஆணேறு - ஆண்மகன்
  • ஆனேறு - காளை, எருது
  • ஆண் - ஆடவன்
  • ஆன் - பசு
  • ஆணை - கட்டளை, ஆட்சி
  • ஆனை - யானை
  • இணை - துணை, இரட்டை
  • இனை - இன்ன, வருத்தம்
  • இணைத்து - சேர்த்து
  • இனைத்து - இத்தன்மையது
  • இவண் - இவ்வாறு
  • இவன் - ஆடவன், (அண்மைச் சுட்டு
  • ஈணவள் - ஈன்றவள்
  • ஈனவள் - இழிந்தவள்
  • உண் - உண்பாயாக
  • உன் - உன்னுடைய
  • உண்ணல் - உண்ணுதல்
  • உன்னல் - நினைத்தல்
  • உண்ணி - உண்பவன், ஒருவகைப் பூச்சி
  • உன்னி - நினைத்து, குதிரை
  • ஊண் - உணவு
  • ஊன் - மாமிசம்
  • எண்ண - நினைக்க
  • என்ன - போல, வினாச்சொல்
  • எண்ணல் - எண்ணுதல்
  • என்னல் - என்று சொல்லுதல்
  • எண்கு - கரடி
  • என்கு - என்று சொல்லுதல்
  • ஏண் - வலிமை
  • ஏன் - வலிமை, ஒரு வினைச்சொல்
  • ஏணை - தொட்டில்
  • ஏனை - மற்றது
  • ஐவணம் - ஐந்து வண்ணம்
  • ஐவனம் - மலை நெல்
  • ஓணம் - ஒரு பண்டிகை
  • ஓனம் – எழுத்துச்சாரியை
  • கணகம் - ஒரு படைப்பிரிவு
  • கனகம் - பொன்
  • கணப்பு - குளிர்காயும் தீ
  • கனப்பு - பாரம், அழுத்தம்
  • கணி - கணித்தல்
  • கனி - பழம், சுரங்கம், சாரம்
  • கணம் - கூட்டம்
  • கனம் -பாரம்
  • கண்ணன் - கிருஷ்ணன்
  • கன்னன் - கர்ணன்
  • கண்ணி - மாலை, கயிறு, தாம்பு
  • கன்னி - குமரிப்பெண், உமை, ஒரு ராசி
  • கணை - அம்பு
  • கனை - ஒலி, கனைத்தல்
  • கண் - ஓர் உறுப்பு
  • கன் - கல், செம்பு, உறுதி
  • கண்று - அம்பு
  • கன்று - அற்பம், இளமரம், குட்டி, கைவளை
  • கண்ணல் - கருதல்
  • கன்னல் - கரும்பு, கற்கண்டு
  • காண் - பார்
  • கான் - காடு, வனம்
  • காணம் - பொன், கொள்
  • கானம் - இசை, காடு, வனம், தேர்
  • காணல் - பார்த்தல்
  • கானல் - பாலை
  • கிணி - கைத்தாளம்
  • கினி - பீடை
  • கிண்ணம் - வட்டில், கிண்ணி
  • கின்னம் - கிளை, துன்பம்
  • குணி - வில், ஊமை
  • குனி - குனிதல், வளை
  • குணித்தல் - மதித்தல், எண்ணுதல்
  • குனித்தல் - வளைதல்
  • குணிப்பு - அளவு, ஆராய்ச்சி
  • குனிப்பு - வளைப்பு, ஆடல்
  • கேணம் - செழிப்பு, மிகுதி
  • கேனம் - பைத்தியம், பித்து
  • கேணி - கிணறு
  • கேனி - பித்துப் பிடித்தவர்
  • கோண் - கோணல், மாறுபாடு
  • கோன் - அரசன்
  • சாணம் - சாணைக்கல், சாணி
  • சானம் - அம்மி, பெருங்காயம்
  • சுணை - கூர்மை, கரணை
  • சுனை - நீரூற்று
  • சுண்ணம் - வாசனைப் பொடி
  • சுன்னம் - சுண்ணாம்பு, பூஜ்ஜியம்
  • சேணம் - மெத்தை
  • சேனம் - பருந்து
  • சேணை - அறிவு
  • சேனை - படை
  • சோணம் - பொன், சிவப்பு, தீ, சோணகிரி
  • சோனம் - மேகம்
  • சோணை - ஒரு நதி, சேரன் மனைவி
  • சோனை - மழைச்சாரல், மேகம்
  • தண் - குளிர்ச்சி
  • தன் - தன்னுடைய
  • தணி - தணித்தல்
  • தனி - தனிமை
  • தாணி - தான்றிமரம்
  • தானி - இருப்பிடம், பண்டசாலை
  • தாணு - சிவன், தூண், நிலைப்பேறு
  • தானு - காற்று
  • திணை - ஒழுக்கம், குலம்
  • தினை - தானியம், ஒருவகைப் புன்செய்ப் பயிர்
  • திண்மை - உறுதி
  • தின்மை - தீமை
  • திண் - வலிமை
  • தின் - உண்
  • துணி - துணிதல், கந்தை
  • துனி - அச்சம், ஊடல் நீட்டித்தல்
  • தெண் - தெளிவு
  • தென் - தெற்கு, அழகு
  • நண்பகல் - நடுப்பகல்
  • நன்பகல் - நல்லபகல்
  • நணி - அணி (அழகு)
  • நனி - மிகுதி
  • நாண் - வெட்கம், கயிறு
  • நான் - தன்மைப் பெயர்
  • நாணம் - வெட்கம்
  • நானம் - புனுகு, கவரிமான்
  • பணி - வேலை, கட்டளையிடு
  • பனி - துன்பம், குளிர், சொல், நோய்
  • பணை - முரசு, உயரம், பரந்த
  • பனை - ஒருவகை மரம்
  • பண் - இசை
  • பன் - அரிவாள், பல
  • பண்ணை - தோட்டம்
  • பன்னை - கீரைச்செடி
  • பண்ணுதல் - செய்தல்
  • பன்னுதல் - நெருங்குதல்
  • பண்ணி - செய்து
  • பன்னி - சீப்பு, பனிநீர், மனை, சணல்
  • பண்மை - தகுதி
  • பன்மை - பல
  • பணித்தல் - கட்டளையிடுதல்
  • பனித்தல் - துளித்தல், தூறல், விரிந்த
  • பட்டணம் - நகரம்
  • பட்டினம் - கடற்கரை நகர்
  • பாணம் - நீருணவு
  • பானம் - அம்பு
  • புணை - தெப்பம்
  • புனை - இட்டுக்கட்டுதல், கற்பனை
  • புண் - காயம்
  • புன் - கீழான
  • பேணம் - பேணுதல்
  • பேனம் - நுரை
  • பேண் - போற்று, உபசரி
  • பேன் - ஓர் உயிரி
  • மணம் - வாசனை, திருமணம்
  • மனம் - உள்ளம், இந்துப்பு
  • மணை - மரப்பலகை, மணவறை
  • மனை - இடம், வீடு
  • மண் - தரை, மண்வகை
  • மன் - மன்னன், பெருமை
  • மண்ணை - இளமை, கொடி வகை
  • மன்னை - தொண்டை, கோபம்
  • மாணி - அழகு, பிரம்மசாரி
  • மானி - மானம் உடையவர்
  • மாண் - மாட்சிமை
  • மான் - ஒரு விலங்கு
  • முணை - வெறுப்பு, மிகுதி
  • முனை - முன்பகுதி, துணிவு, முதன்மை
  • வணம் - ஓசை
  • வனம் - காடு, துளசி
  • வண்மை - வளப்பம், கொடை
  • வன்மை - உறுதி, வலிமை
  • வண்ணம் - நிறம், குணம், அழகு
  • வன்னம் - எழுத்து, நிறம்
  • வாணகம் - அக்கினி, பசுமடி
  • வானகம் - மேலுலகம்
  • வாணம் - அம்பு, தீ, மத்தாப்பு
  • வானம் - ஆகாயம், மழை
  • வாணி - கலைமகள், சரஸ்வதி
  • வானி - துகிற்கொடி

ல, ழ, ள பொருள் வேறுபாடு

தொகு
  • அலகு - பறவையின் மூக்கு, அளவு, ஆண்பனை
  • அழகு - வனப்பு
  • அளகு - சேவல், பெண்கூகை
  • அலகம் - திப்பிலி
  • அளகம் - வெள்ளெருக்கு, நீர்
  • அலகை - கற்றாழை, பேய்
  • அளகை - அளகாபுரி, பெண்
  • அழம் - பிணம்
  • அலம் - கலப்பை
  • அளம் - உப்பு
  • அலத்தல் - அலட்டல், அலைதல்
  • அளத்தல் - அளவிடுதல், மதித்தல்
  • அலவன் - ஆண்நண்டு
  • அளவன் - அளப்பவன், உப்பு எடுப்போன்
  • அழி - அழித்துவிடு
  • அலி - பேடி, காகம், விருச்சிகராசி
  • அளி - கருணை, கள், வண்டு
  • அல்லல் - துன்பம்
  • அள்ளல் - வாரி எடுத்தல்
  • அழை - கூப்பிடு
  • அலை - கடல், நீரலை, அலைதல்
  • அளை - தயிர், நண்டு, புற்று
  • அவல் - பள்ளம், உணவுப் பொருள்
  • அவள் - பெண் (சேய்மைச் சுட்டு)
  • அல் - இரவு
  • அள் - அள்ளி எடு, நெருக்கம்
  • உலவு - நட
  • உளவு - ஒற்று
  • உழவு - கலப்பையால் உழுதல்
  • உழி - இடம், பொழுது
  • உளி - தச்சுக் கருவிகளுள் ஒன்று
  • உலு - தானியப் பதர்
  • உழு - நிலத்தை உழு
  • உளு - உளுத்துப் போதல்
  • உலை - கொல்லன் உலை, நீருலை
  • உழை - பாடுபடு, பக்கம், கலைமான்
  • உளை - பிடரி மயிர், சேறு, தலை
  • உழுவை - புலி
  • உளுவை - மீன்வகை
  • எல் - கல், மாலை, சூரியன்
  • எள் - எண்ணெய் வித்து, நிந்தை
  • எலு - கரடி
  • எழு - எழுந்திரு, தூண்
  • ஒலி - சப்தம், நாதம், காற்று
  • ஒழி - அழி, தவிர், கொல், துற
  • ஒளி - வெளிச்சம், மறை(த்து வை)
  • ஒல் - ஒலிக்குறிப்பு
  • ஒள் - அழகு, உண்மை, அறிவு, ஒளி
  • கலகம் - போர், அமளி, இரைச்சல்
  • கழகம் - சங்கம், கூட்டமைப்பு
  • கழங்கம் - கழங்கு, விளையாட்டுக் கருவி
  • களங்கம் - குற்றம், அழுக்கு
  • கலி - கலியுகம், பாவகை, சனி
  • கழி - கோல், மிகுதி, உப்பளம்
  • களி - மகிழ்வு, இன்பம்
  • கலை - ஆண்மான், சந்திரன், கல்வி
  • கழை - மூங்கில், கரும்பு, புனர்பூசம்
  • களை - அழகு, புல் பூண்டு, அயர்வு
  • கல் - மலை, பாறை, சிறுகல்
  • கள் - மது, தேன்
  • கலம் - கப்பல், பாத்திரம்
  • களம் - இடம், போர்க்களம், இருள்
  • காலி - ஒன்றுமில்லாதது, வெற்றிடம்
  • காளி - துர்க்கை, மாயை
  • காழி - சீர்காழி (ஊர்)
  • காலை - பொழுது, விடியற்பொழுது
  • காளை - காளைமாடு, இளைஞன்
  • காலம் - பொழுது, நேரம்
  • காளம் - எட்டிமரம், சூலம்
  • கிலி - அச்சம், பயம்
  • கிழி - கிழித்துவிடு, முடிப்பு (பொன்)
  • கிளி - பறவை, வெட்டுக்கிளி
  • கிழவி - முதியவள், மூதாட்டி
  • கிளவி - சொல், மொழி
  • குலி - மனைவி
  • குழி - பள்ளம், பாத்தி, பன்னீரடிச் சதுரம், வயிறு
  • குளி -நீராடு
  • குலம் -ஜாதியின் உட்பிரிவு, இனம், குடி
  • குளம் -நீர்நிலை, கண்மாய், ஏரி
  • குலை - கொத்து, மனம் தடுமாறுதல்
  • குழை - குண்டலம், குழைந்துபோதல்
  • குலவி - மகிழ்ந்திருத்தல்
  • குழவி - குழந்தை, இளமை, யானைக் கன்று அம்மிக்கல்
  • குளவி - ஒரு வண்டு, காட்டுமல்லி
  • குலிகம் -சிவப்பு, இலுப்பை
  • குளிகம் -மருந்து, மாத்திரை
  • குவலை -துளசி, கஞ்சா
  • குவளை - குவளை மலர், சொம்பு, ஒரு பேரெண்
  • கூலம் - தானியம், கடைத்தெரு
  • கூளம் - குப்பை
  • கூலி - ஊதியம்
  • கூளி(யார்) - பேய், காளை, வீரர், படைவீரர், வணங்கி நிற்பவர், ஏவலாளர்
  • கொலு - அரசசபை, திருவோலக்கம்(தெய்வசபை), உல்லாசமாக வீற்றிருத்தல்
  • கொழு - மழு, கலப்பையில் மாட்டும் பெரிய இரும்பு, கொழு கொழுத்து இருத்தல்
  • கொளு - புறப்பொருள் வெண்பாமாலைத் துறை, பொருந்துவாய்
  • கொலை - கொல்லுதல்
  • கொளை - கோட்பாடு, பயன், இசைப்பாட்டு, தாளம்
  • கொல்லாமை - கொலை செய்யாமை
  • கொள்ளாமை - ஏற்றுக்கொள்ளாமை, அடங்காமை
  • கொல்லி - உயிர்க்கொல்லி, ஒரு மலை
  • கொள்ளி - கொள்ளிக்கட்டை
  • கொல்லை - புழக்கடை, தரிசுநிலம்
  • கொள்ளை - திருடுதல், மிகுதி
  • கோலம் - அழகு, அலங்காரம்
  • கோளம் - உருண்டை, வட்டம்
  • கோலை - மிளகு
  • கோழை - வீரமற்றவன், கபம்
  • கோளை - குவளை, எலி
  • கோல் - மரக்கொம்பு, அம்பு, குதிரைச்சம்மட்டி, தண்டு, யாழ்நரம்பு
  • கோள் - கிரகம்
  • கோலி - இலந்தை, விளையாடும் குண்டு
  • கோழி - உறையூர், விட்டில், பறவை
  • கோளி - பூவாது காய்க்கும் மரம், ஆத்தி, ஆலம்
  • சலம் - நீர், சிறுநீர், குளிர்
  • சளம் - பொய், துன்பம், வஞ்சனை
  • சாலை - பாடசாலை, பொது மண்டபம், அறக்கூடம்
  • சாளை - கடல்மீன்
  • சாழை - குடிசை, குச்சு
  • சுழித்தல் - சுழலுதல், நீர்ச்சுழல்
  • சுளித்தல் - முறித்தல், சினத்தல்
  • சூலை - வயிற்று நோய்
  • சூளை - செங்கல் சூளை
  • சூல் - கர்ப்பம்
  • சூழ் - சூழ்ந்துகொள், சுற்று
  • சூள் - சபதம்
  • சேல் - மீன்
  • சேள் - மேலிடம்
  • சோலி - ரவிக்கை, காரியம்
  • சோழி - பலகரை
  • சோளி - கூடைவகை
  • தவளை - ஓர் உயிரி
  • தவலை - பாத்திரம்
  • தலம் - இடம், பூமி
  • தழம் - தைலம்
  • தளம் - மேடை, மாடி வீட்டின் அடுக்கு
  • தழை - தாவர உறுப்பு
  • தலை - மண்டை
  • தளை - விலங்கு
  • தாலம் - உலகம், தேன்
  • தாளம் - இசைக்கருவி, ஜதி
  • தாலி - மங்கலநாண்
  • தாழி - கடல், குடம், பரணி பெரியபாண்டம்
  • தாளி - தாளித்தல், பனைதால் - நாக்கு, தாலாட்டு
  • தாழ் - தாழ்தல், குனிதல்
  • தாள் - முயற்சி, பாதம், ஆதி, படி, காகிதம்
  • துலக்கம் - ஒளி, தெளிவு
  • துளக்கம் - அசைவு, வருத்தம், கலக்கம், ஒளி
  • துலம் - கோரை, கனம்
  • துளம் - மாதுளை, மயிலிறகு
  • துலி - பெண் ஆமை
  • துழி - பள்ளம்
  • துளி - மழைத்துளி, திவலை, சிறிய அளவு
  • துலை - ஒப்பு, கனம்
  • துளை - துவாரம், வாயில்
  • தூலி - எழுதுகோல், எழுத்தாணி
  • தூளி - புழுதி, குதிரை
  • தெழித்தல் - கோபித்தல், முழங்குதல், அதட்டுதல், நீக்குதல், ஆரவாரித்தல்
  • தெளித்தல் - விதைத்தல், சபதம், கூறல், விதைத்தல்
  • தெல் - அஞ்சுதல்
  • தெள் - தெளிவான
  • தோலன் - அற்பன்
  • தோழன் - நண்பன்
  • தோலி - பிசின், ஒருவகை மீன்
  • தோழி - பாங்கி, நட்பால் நெருக்கமானவள்
  • தோளி - அவுரி (ஒருவகை குத்துச்செடி), அரக்கு
  • தோல் - சருமம், வனப்பு, விதையின் மேல்பகுதி
  • தோள் - புயம், வீரம்
  • நலன் - நலம், அழகு, புகழ், இன்பம், நன்மை, குணம்,
  • நளன் - தமயந்தியின் கணவன், ஓர் அரசன்
  • நலி - நோய்
  • நளி - குளிர்ச்சி, பெருமை
  • நலிதல் - நலிந்துபோதல், தோற்றல்
  • நளிதல் - செறிதல், பரத்தல், ஒத்தல்
  • நல் - நல்ல
  • நள் - இரவு, நடு, நள்ளிரவு
  • நாலம் - பூவின் காம்பு
  • நாழம் - இழிவுரை, வசவு
  • நாளம் - பூந்தண்டு, உட்துளை, ரத்தநாளம்
  • நாலி - முத்து, கந்தை ஆடை
  • நாழி - உள்தொளையுள்ள பொருள், ஒருபடி, ஏர், அம்பறாத்துணி, நாடா, பூரட்டாதி
  • நாளி - கல், நாய்
  • நாலிகை - மூங்கில், அடுப்புச்சந்து
  • நாழிகை - வட்டம், கடிகாரம்
  • நால் - நான்கு
  • நாழ் - குற்றம், செருக்கு
  • நாள் - காலம், திதி
  • நீலம் - ஒரு நிறம், கருங்குவளை, இருள்
  • நீளம் - நெடுமை (நீண்ட), தாமதம்
  • நீல் - நீலம், காற்று
  • நீள் - நீளம், ஒளி
  • பலம் - கிழங்கு, வலி, நெற்றி, சக்தி, சேனை, வன்மை, உறுதி, எடை
  • பழம் - கனி, முதுமை
  • பல்லி - சிற்றூர், இடையர் ஊர், உழுகருவி, ஓர் உயிரி, வண்டியுறுப்பு
  • பள்ளி - இடைச்சேரி, புத்தர் கோயில், குறும்பன், மருதநிலத்தூர், படுக்கை, பள்ளிக்கூடம்
  • பலி - பலியிடுதல், பலியுயிர்
  • பழி - குற்றம்
  • பால் - திரவ உணவு, பகுப்பு, இயல்பு
  • பாழ் - வீண், வெறுமை
  • பீழை - துன்பம்
  • பீளை - கண் அழுக்கு
  • புலி - காட்டு விலங்கு
  • புளி - புளியமரம், புளியங்காய்
  • புலை - புலால், ஊன், கீழ்மை
  • புழை - துளை, வாயில், நரகம்
  • புகல் - அடைக்கலம்
  • புகழ் - பெருமை
  • புல் - அற்பம், கலவி, புல்பூண்டு
  • புள் - பறவை
  • பூலம் - புற்கட்டு
  • பூளம் - பூவரசு
  • பூழை - துவாரம், கோபுரவாயில்
  • பூளை - பூளைச்செடி, இலவம் பஞ்சு
  • பாலி - தானியக் குவியல், தூற்றாத தானியம்
  • பாழி - கொடுத்தல், ஈதல்
  • பாளி - வரப்பு, எல்லை
  • பாலிவு - அழகு, நிறைவு
  • பாழிவு - பொழிதல், மேன்மை
  • போலி - பொய், வஞ்சகம், ஒப்பு
  • போளி - இனிப்புப் பண்டம்
  • பொலிதல் - செழித்தல், மங்கலமாதல்
  • பொழிதல் - ஈதல், கொடுத்தல், சொரிதல், பெய்தல், நிறைதல்
  • மலம் - அழுக்கு, பாவம்
  • மழம் - இளமை, குழந்தை
  • மலை - குன்று, பொருப்பு, வெற்பு,சிகரம்
  • மழை - மழைநீர், குளிர்ச்சி, மேகம்
  • மலைத்தல் - வியத்தல், தடுமாறுதல்
  • மழைத்தல் - மழை பெய்திருத்தல், குளிர்ந்திருத்தல்
  • மல்லிகை - மாலை, கழுத்தணி, வரிசை
  • மாளிகை - அரண்மனை, கோயில்
  • மாலை - அந்திப்பொழுது, பூமாலை
  • மாழை - மயக்கம், இளமை, அழகு
  • மாளை - புளியம்பட்டை
  • மால் - திருமால், மயக்கம், அருகன், இந்திரன், பெருமை, மேகம்
  • மாள் - இறத்தல், சாதல் (இற,சாவு)
  • முலை - உடலிலுள்ள ஓர் உறுப்பு
  • முழை - குகை
  • முளை - முளைத்தல், தறி, ஆப்பு, அங்குசம், இளமை, தண்டு, மூங்கில்
  • முழி - விழி (விழித்தல்)
  • முளி - மரக்கணு, விரல்முளி, வாட்டம்
  • மூலி - மூலிகை, மரம், வேருள்ளது
  • மூழி - அகப்பை, சோறு, நீர்நிலை, கோணம்
  • மூலை - இரு கோடுகள் சந்திக்கும் இடம்
  • மூளை - மண்டைக்குள் இருக்கும் ஓர் உறுப்பு(முதன்மைப் பகுதி)
  • மெல்ல - மென்று தின்பது
  • மெள்ள - மெதுவாக
  • மாலி - மொளலி கிரீடம்
  • மாழி - மேழி, கலப்பை
  • மாளி - துணிமூட்டை
  • வலம் - சுற்றுதல், வலப்பக்கம், வெற்றி
  • வளம் - வளமை, அழகு
  • வலவன் - திருமால்
  • வளவன் - சோழன், வேளாளன்
  • வலன் - ஓர் அரசன், வெற்றி, வல்லவன்
  • வளன் - செழுமை, வளப்பன்
  • வழப்பம் - வழக்கம், இயல்பு
  • வளப்பம் - வளமை, செழிப்பு
  • வலி - நோய், வலிமை, துன்பம்
  • வழி - நெறி, பாதை, தடம், உபாயம்
  • வளி - காற்று
  • வலை - மீன் முதலியன பிடிக்கும் ஒரு கருவி
  • வழை - சுரபுன்னை, புதுமை, இளமை
  • வளை - கை வளையல், எலி வளை
  • வல் - வலிமை, விரைவு, திறமை
  • வள் - ஒலிக்குறிப்புச் சொல்
  • வல்லம் - வாழை, ஓர் ஊர்
  • வள்ளம் - மரக்கலம், படகு, அளவு, தொன்னை
  • வல்லி - பூமி, பெண், பிரிதல், படர் கொடி
  • வள்ளி - வள்ளியம்மை, ஆபரணம், சந்திரன்
  • வலு - வலிமை, பலம், பற்று
  • வழு - குற்றம், தவறு, பழிப்புரை, கேடு
  • வளு - இளமை, இளைய
  • வாலி - கிஷ்கிந்தை அரசன் (இராமாயணம்)
  • வாழி - வாழ்க (எனவாழ்த்துதல்)
  • வாளி - அன்பு, வட்ட வாள், வீரன், ஒரு காதணி
  • வாலை - இளம்பெண், திராவகம் வடிக்கும் பாத்திரம், ஒரு சக்தி
  • வாழை - வாழைமரம்
  • வாளை - வாளை மீன்
  • வால் - விலங்குகளின் ஓர் உறுப்பு
  • வாழ் - வாழ்வாயாக (என்று வாழ்த்துதல்)
  • வாள் - போர்வாள், நீண்டகத்தி
  • விலா - விலா எலும்பு
  • விழா - திருவிழா, கொண்டாட்டம்
  • விளா - இளமை, வெண்மை, நிணம்
  • விழி - கண், கருவிழி
  • விளி - கூப்பிடு, அழை, ஏழிசையில் ஒன்று
  • விலை - மதிப்பு, விலைக்கு விற்றல்
  • விழை - விரும்பு, ஆசைப்படு
  • விளை - ஒரு மீன்வகை, விளைவி (விளைச்சல்)
  • விலக்கு - விலக்கி விடு, தவிர்
  • விளக்கு - விளக்கமாகச் சொல், தீபம்
  • விலங்கு - பூட்டு, கை, கைகளைப் பிணிக்கும் கருவி, மிருகம்
  • விளங்கு - திகழ் (திகழ்தல்), சிற்றரத்தை (மூலிகை வகை)
  • வெல்லம் - சக்கரைக்கட்டி, கருப்பட்டி
  • வெள்ளம் - மிதமிஞ்சிய நீர்பெருக்கு
  • வேலம் - வேலமரம், தோட்டம்
  • வேழம் - யானை, கரும்பு, மூங்கில்
  • வேல் - வேலாயுதம்
  • வேள் - வேளிர் குலத்தவன், மன்மதன், ஆசை
  • வேலை - பணி, கடல்
  • வேளை - பொழுது, நேரம், ஒருவகைக் கீரை

ர, ற பொருள் வேறுபாடு

தொகு
  • அர - பாம்பு
  • அற - தெளிய, முற்றுமாக
  • அரவு - பாம்பு
  • அறவு - அறுதல், தொலைதல்
  • அரம் - ஒரு கருவி
  • அறம் - தர்மம், நீதி, கற்பு, புண்ணியம், கடமை, அறநூல், துறவறம்
  • அரி - திருமால், அரிசி, அழகு, அரிதல், பன்றி, வண்டு, கடல், தகடு, சிவன், சிங்கம்.
  • அறி - அறிந்துகொள்
  • அரிய - கிடைத்தற்கு அரிதான, கஷ்டமான
  • அறிய - அறிந்துகொள்ள, தெரிந்துகொள்ள
  • அரன் - சிவன்
  • அறன் - தர்மம், அறக்கடவுள்
  • அரிவை - பெண் (7 பருவத்துள் ஒன்று. 18 வயதுக்கு மேல் 25 வயதுக் குட்பட்ட பெண்)
  • அறிவை - அறிவாய்
  • அருகு - புல்வகை (அருகம்புல்), அண்மை
  • அறுகு - குறைந்து போதல்
  • அக்கரை - அந்தக் கரை
  • அக்கறை - ஈடுபாடு
  • அரை - பாதி, மேகலை, வயிறு, ஒரு மரம்
  • அறை - வீட்டின் பகுதி, அடி, பாத்தி, ஒலி, பாசறை, சொல், குகை, வஞ்சனை, மாளிகை
  • அரைதல் - தேய்தல்
  • அறைதல் - அடித்தல், சொல்லுதல்
  • அப்புரம் - அந்தப் பக்கம்
  • அப்புறம் - பிறகு
  • அர்ப்பணம் - உரித்தாக்குதல்
  • அற்பணம் - காணிக்கை செலுத்துதல்
  • அரு - உருவமற்றது
  • அறு - துண்டித்துவிடு, அறுத்துவிடு
  • அருமை - சிறப்பு, அன்பு, இன்மை, சுலபத்தில் கிடைக்காதது
  • அறுமை - நிலையின்மை, ஆறு
  • ஆரு - குடம், நண்டு
  • ஆறு - ஒரு எண், வழி, சமயம், தன்மை, நதி, ஒழுக்கம், பக்கம், நிலை
  • ஆர - நிறைய, அனுபவிக்க
  • ஆற - சூடு ஆற (குறைய)
  • ஆரல் - ஒருவகை மீன்
  • ஆறல் - சூடு குறைதல்
  • இரத்தல் - யாசித்தல்
  • இறத்தல் - இறந்துபோதல், சாதல்
  • இரகு - சூரியன்
  • இறகு - சிறகு
  • இரக்கம் - கருணை
  • இறக்கம் - சரிவு, மரணம்
  • இரங்கு - கருணைகாட்டு
  • இறங்கு - கீழிறங்கி வா
  • இரவம் - இரவு
  • இறவம் - இறால் மீன்
  • இரவி - சூரியன், எருக்கு, மலை, வாணிகத்தொழில்
  • இறவி - இறத்தல்
  • இரவு - இரவு நேரம், யாசித்தல்
  • இறவு - மிகுதி, இறால்மீன், இறுதி, தேன்கூடு, சாவு, முடிவு, நீக்கம்
  • இரை -ஒலி, உணவு
  • இறை - கடவுள், அணு, அரசன், ரேகை, சந்து, கடமை, தலைமை, விடை, உயரம், மூலை
  • இரு - இரண்டு, பெரிய, உட்கார், அமர்ந்துகொள்
  • இறு - ஒடி, கெடு, சொல்லு
  • இரும்பு - கடிவாளம், கிம்புரி, ஆயுதம், ஓர் உலோகம்
  • இறும்பு - வண்டு, சிறுமலை
  • இருப்பு - கையிருப்பு, இருப்பிடம், ஆசனம், நிலை, பொருள், முதல்
  • இறுப்பு - வடிப்பு
  • இருத்தல் - அமர்ந்திருத்தல், காத்திருத்தல்
  • இறுத்தல் - வடித்தல், செலுத்தல், எறிதல், கடன் கொடுத்தல், பதில்கூறல், முடித்தல், முறித்தல்
  • இருக்கு - மந்திரம், ரிக் வேதம்
  • இறுக்கு - அழுத்து, இறுக்கிக்கட்டு
  • இரைத்தல் - ஒலித்தல், மூச்சுவாங்குதல்
  • இறைத்தல் - சிதறுதல், மிகு செலவு
  • உரவு - அறிவு, ஒலி, மிகுதி, வலி, ஞானம், விடம்
  • உறவு - நட்பு, சுற்றம், எறும்பு
  • உரவோர் - அறிஞர், முனிவர்
  • உறவோர் - சுற்றத்தார், அடைந்தோர்
  • உரி - தோல், மரப்பட்டை, அரைப்படியளவு, உரிச்சொல்,கொத்துமல்லி
  • உறி - உறிவெண்ணெய், தூக்கு
  • உரு - வடிவம், அழகு, உடல், மரக்கலம், நிறம், அச்சம், பெருமை, மேன்மை
  • உறு - மிகுதி
  • உருக்குதல் - இளக்குதல், மெலியச் செய்தல்
  • உறுக்குதல் - சினத்தல், அதட்டுதல்
  • உரை - புகழ், விளக்கவுரை, நூல், பொன்மாற்று, அறிவுரை, சொல்
  • உறை - இடம், பண்டம், பொருள், மருந்து, பாலில் இடும் பிரை, துளி, மழை, ஆடை, துன்பம், பாம்பின் விஷப்பை
  • உரைப்பு - தங்குதல், தோய்தல்
  • உறைப்பு - காரம், கொடுமை
  • உரையல் - சொல்லல்
  • உறையல் - மாறுபாடு, பிணக்கு
  • உரிய - உரிமையான
  • உறிய - உறிஞ்ச
  • ஊரல் - ஊர்தல், கிளிஞ்சல், ஒருவகைப் பறவை
  • ஊறல் - தினவு, ஊற்று, சாறு, வருவாய், ஊறுதல், களிப்பு
  • ஊரு - அச்சம், தொடை
  • ஊறு - இடையூறு, துன்பம், காயம் உறுதல், தீண்டல், குற்றம், புண், கொலை
  • எரி - தீ, கார்த்திகை, பிரபை, இடபராசி, நெருப்பு, நரகம், வெம்மை, கந்தகம்
  • எறி - விடுதல், எறிதல், குறிப்பாகக் கூறுதல்
  • ஏர - ஓர் உவமஉருபு
  • ஏற - மிகுதி, உயர (ஏறுதல்)
  • ஏரி - நீர்நிலை, குளம்
  • ஏறி - உயர்ந்த, மேலே ஏறி
  • ஒரு - ஒன்று, ஒப்பற்ற, ஆடு
  • ஒறு - தண்டி, அழி, இகழ்
  • ஒருத்தல் - ஆண் விலங்குகளின் பொதுப்பெயர்
  • ஒறுத்தல் - தண்டித்தல், துன்புறுத்தல், வருத்துதல், வெறுத்தல், கடிதல், இகழ்தல், குறைத்தல்
  • ஒருவு - நீங்கு
  • ஒறுவு - வருத்தம், துன்பம்
  • கரடு - மரக்கணு, மணிக்கட்டு, முருடு, வளர்ச்சியற்றது
  • கறடு - தரமற்ற முத்து
  • கரம் - கிரணம், விஷம், செயல், கை, கழுதை
  • கறம் - கொடுமை, வன்செய்கை
  • கரவு - பொய், வஞ்சனை, மறைவு
  • கறவு - கப்பம்
  • கரவை - கம்மாளர் கருவி
  • கறவை - பாற்பசு
  • கரி - அடுப்புக்கரி, நிலக்கரி, யானை, சாட்சி, பெண்கழுதை, விஷம், கருமை
  • கறி - இறைச்சி, மிளகு
  • கரத்தல் - மறைத்தல்
  • கறத்தல் - கவர்தல், பால் கறத்தல்
  • கருத்து - எண்ணம்
  • கறுத்து - கருநிறங்கொண்டு
  • கரு - சினை, பிறவி, முட்டை, நடு, கருநிறம், அணு, அடிப்படை
  • கறு - சினம், வைராக்கியம், கோபம், அகங்காரம்
  • கருப்பு - பஞ்சம்
  • கறுப்பு - கருநிறம், பேய், கோபம், குற்றம், கறை
  • கரை - எல்லை, தடுப்பு, ஓரம்
  • கறை - அழுக்கு, குற்றம், ரத்தம்
  • கரையான் - மீனவன்
  • கறையான் - செல் (ஓர் உயிரி)
  • கர்ப்பம் - கருவுறுதல், உள், சினை
  • கற்பம் - கஞ்சா, அற்பம், ஊழிக்காலம், தேவலோகம், திருநீறு, ஆயுள், மந்திர சாஸ்திரம், 432 கோடி, மூப்பு நீக்கும் மருந்து
  • கர்ப்பூரம் - சூடம், பொன், மருந்து, கூடம்
  • கற்பூரம் - பொன்னாங்கண்ணி
  • காரி - கரிக்குருவி. காக்கை, வயிரவன், ஐயனார், ஒரு நதி, சனி, விஷம், ஒரு வள்ளல், வாசுதேவன்
  • காறி - காறிஉமிழும் கழிவு
  • காரு - வண்ணான், தேவதச்சன்
  • காறு - காறுதல் (காறி உமிழ்), அளவு
  • காரை - ஒரு வகை செடி, ஒரு வகை மீன், சிமெண்ட் மணல் சேர்ந்த கலவை
  • காறை - ஒரு கழுத்தணி
  • கீரி - ஓர் உயிரினம்
  • கீறி - பிளந்து, அரிந்து
  • குரங்கு - ஒரு விலங்கு
  • குறங்கு - தொடை, கொக்கி
  • குரவர் - கடவுள், குரு, பெரியோர், அரசர்
  • குறவர் - ஒரு ஜாதியினர்
  • குரவை - கூத்து வகை, ஒலி, கடல், மகளிர் மகிழ்ச்சி
  • குறவை - ஒருவகை மீன்
  • குரத்தி - தலைவி, குருவின் மனைவி
  • குறத்தி - குறத்தி ஜாதிப் பெண்
  • குருகு - பறவை, குட்டி, கொக்கு, உலைத்துருத்தி, உலைமூக்கு, குருக்கத்தி, நாரை, கோழி, கைவளை
  • குறுகு - அண்மைப்படுத்து
  • குருகினம் - பறவை இனம்
  • குறுகினம் - நெருங்கினோம்
  • குரை - சத்தம், ஒலி, குதிரை, பெருமை, ஓசை
  • குறை - குற்றம், காரியம், கடன், வேண்டுகோள், வறுமை
  • குரு - ஆசிரியர், மேன்மை, கனம், வியாழன், நிறம், தந்தை, இரசம்
  • குறு - குறுகு
  • கூரல் - ஒரு மீன், பறவை இறகு
  • கூறல் - சொல்லுதல், விற்றல்
  • கூரை - சிறிய ஓலை வீடு, வீட்டின் மேற்கூரை, சிற்றில்
  • கூறை - புது ஆடை, சீலை
  • கூரிய - கூர்மையான
  • கூறிய - சொன்ன
  • கூர - குளிர்ச்சி மிக
  • கூற - சொல்ல, வேண்டல்
  • கோரல் - கூறுதல்
  • கோறல் - கொல்லல்
  • கோரை - புல்வகை
  • கோறை - குவளை, பொந்து
  • கோரல் - சேர்தல், குளிர் காற்று, மலைப்பக்கம்
  • கோறல் - குளிர் காற்று, மழை
  • சிரை - சிரைத்தல், முடிநீக்கல்
  • சிறை - சிறைச்சாலை, மதில், காவல், பக்கம், நீர்க்கரை, இறகு, அடிமை, அறை, அணை
  • சீரிய -​ சினந்த,​​ சிறந்த,​​ சீராய்​
  • சீறிய -​ சினந்த
  • சுரா​ -​ கள்​
  • சுறா​ -​ சுறா மீன்
  • சூரல்​ -​ மூங்​கில்,​​ பிரம்பு​
  • சூறல்​ -​ தோண்​டல்
  • சுருக்கு​ -​ வலை,​​ சுருக்​கம்,​​ கட்டு,​​ பூமாலை,​​ வகை,​​ குறைவு,​​ நெய்த்​து​டுப்பு​
  • சுறுக்கு​ -​ விரைவு
  • செரு​ -​ போர்,​​ ஊடல்
  • செறு​ -​ வயல்,​​ பாத்தி,​​ குளம்
  • செரு​நர்​ -​ பகை​வர்,​​ படை​வீ​ரர்​
  • செறு​நர்​ -​ பகை​வர்
  • சொரி​ -​ தினவு,​​ அரிப்பு,​​ பொழி
  • சொறி -​ சிரங்கு,​​ சொறி​தல்
  • தரித்​தல்​ -​ அணி​தல்,​​ பொறுத்​தல்,​​ தங்​கல்,​​ தாம​தித்​தல்,​​ தாங்​கு​தல்​
  • தறித்​தல் -​ வெட்​டு​தல்
  • தரி​ -​ அணி,​​ அணிந்​து​கொள்​
  • தறி -​ தூண்,​​ ஆப்பு,​​ நெசவு இயந்​தி​ரம்,​​ முளைக்​கோல்
  • தரு​தல் -​ கொடுத்​தல்​
  • தறு​தல்​ -​ இறு​கக்​கட்​டு​தல்
  • தாரு​ -​ மரம்,​​ தேவ​தாரு,​​ பித்​தளை
  • தாறு​ -​ குலை,​​ அங்​கு​சம்,​​ முள்,​​ இரும்பு,​​ முள்​கோல்
  • திரம்​ -​ மலை,​​ உறுதி,​​ நிலை,​​ பூமி​
  • திறம்​ -​ உறுதி,​​ நரம்​புள்ள வீணை,​ கூறு​பாடு,​​ சுற்​றம்,​​ குலம்,​​ பக்​கம்,​​ வல்​லமை,​​ ஒழுக்​கம்,​​ மேன்மை, வர​லாறு,​​ கார​ணம்
  • திரை​ -​ அலை,​​ கடல்,​​ திரைச்​சீலை
  • திறை​ -​ கப்​பம்
  • துரவு​ -​ கிணறு​
  • துறவு​ -​ துறத்​தல்,​​ துற​வ​றம்
  • துரை​ -​ பெரி​யோன்,​​ தலை​வன்
  • துறை​ -​ நீர்த்​துறை,​​ வழி,​​ இடம்,​​ நூல்,​​ கடற்​கரை,​​ உபா​யம்,​​ பாவி​னம்
  • துரு​ -​ களிம்பு
  • துறு​ -​ கூட்​டம்,​​ நெருக்​கம்
  • தூரல்​ -​ தூரு​தல்,​​ வருத்​தம்
  • தூறல்​ -​ மழைத்​துளி,​​ பழி சொல்​லு​தல்
  • தூரன்​ -​ குலத்​தின் பெயர்
  • தூறன்​ -​ மூர்க்​கன்
  • துரு​ -​ வீதி
  • துதறு​ -​ அழி
  • தேரார்​ -​ கல்​லா​த​வர்,​​ கீழ்​மக்​கள்,​​ பகை​வர்​
  • தேறார்​ -​ அறி​வி​லார்,​​ பகை​வர்
  • தேரி - மணல் திட்டை, மணல் குன்று
  • தேறி - தேர்ச்சி பெற்று, தெளிந்து
  • நரை - நரைமுடி, வெண்மயிர், மூப்பு, எருது, கவரிமா, மரச்சொத்தை, பெருமை
  • நறை - தேன், சாதிக்காய், கள், வாசனை, நறும்புகை, பச்சிலைக்கொடி, குற்றம்
  • நாரி - பெண், பார்வதி, வாசனை, கள், சேனை, பன்னாடை, தேன்
  • நாறி - கற்றாழை
  • நிருத்தம் - கூத்து, நடனம், பதம் பிரித்துப் பொருள் கூறும் நூல், பற்றின்மை
  • நிறுத்தம் - நிறுத்தும் இடம்
  • நிரை - பசு, ஒழுங்கு, வரிசை
  • நிறை - கற்பு, அளவு, அழிவின்மை, நீதி, வரையறை, திண்மை, நிரப்பு
  • நூரல் - அவிதல், பதங்கெடுதல்
  • நூறல் - அவித்தல்
  • நேரி - அமுக்கு, நசுக்கு, அழுத்து
  • நேறி - வழி, கோயில், கற்பு
  • பரட்டை - பரட்டைத்தலை
  • பறட்டை - செழிப்பற்றது
  • பரதி - கூத்தாடுபவன்
  • பறதி - அவசரம், பறத்தல்
  • பரத்தல் - அலமறுதல், மிகுதல்
  • பறத்தல் - பறந்துசெல்லல்
  • பரம்பு - வயலை சமப்படுத்தும் பலகை
  • பறம்பு - பாரியின் மலை
  • பரல் - விதை, பருக்கைக்கல்
  • பறல் - பறவை
  • பரவை - கடல், ஆடல், பரப்பு
  • பறவை - பறப்பவை, ஒரு நோய்
  • பரி- குதிரை, பெருமை, விரைவு, செலவு, சுமை, மிகுதி
  • பறி - பறித்தல், கொள்ளை, பொன், வலை, உடம்பு, ஓலைப்பாய்
  • பரித்தல் - காத்தல், ஓடுதல், தாங்குதல், சுமத்தல், சூழ்தல், தரித்தல்,
  • பறித்தல் - பிடுங்குதல்
  • பரிவு - அன்பு, துன்பம், இரக்கம்
  • பறிவு - கழிவு, அதிர்தல்
  • பருகு - குடி, அருந்து
  • பறுகு - பறட்டை, அன்பு, பக்குவம்
  • பரை - சிவசக்தி
  • பறை - இசைக்கருவி, இறகு, வாத்தியம், பறவை, சொல்
  • பாரை - கடப்பாரை
  • பாறை - கற்பாறை
  • பிரை - உறைமோர், பயன்
  • பிறை - பிறைச்சந்திரன்
  • பீரு - புருவம், அச்சமுள்ளோன்
  • பீறு - கிழிவு
  • புரம் - மாடம், கோயில், இராஜதானி, ஊர், முன், மேல்மாடம், ஒரு நகரம்
  • புறம் - இடம், வரியில்லா நிலம், பக்கம், வெளி, பின்புறம், முதுகு
  • புரவு - கொடை, நிலம், செழுமை, காத்தல், அரசர், கப்பம், ஆற்றுநீர் பாயும் நிலம்
  • புறவு - காடு, புறா
  • பெருக்கல் - நிறைத்தல், மிகுத்தல், நிரப்புதல், அதிகப்படுத்தல், மிகுவித்தல்
  • பெறுக்கல் - அரிசி, மிகுத்தல்
  • பொரி - நெற்பொரி, பொரிதல்
  • பொறி - தீப்பொறி, அறிவு, எழுந்து, வரிவண்டு
  • பொரித்தல் - வறுத்தல், குஞ்சு பொரித்தல்
  • பொறித்தல் - எழுதுதல், தீட்டுதல், பதித்தல், அடையாளமாக வைத்தல்
  • பொருப்பு - மலை, பக்கமலை
  • பொறுப்பு - பாரம், பொறுமை
  • பொரு - போர்
  • பொறு - பொறுத்திரு
  • மரத்தல் - விறைத்தல்
  • மறத்தல் - மறதி, நினைவின்மை
  • மரம் - தாவர வகை, மூலிகை, மரக்கலம், பறைவகை
  • மறம் - வீரம், போர், சினம், மாறுபாடு, கொலை, பாவம், வலி, கொடுமை, மயக்கம்
  • மரி - விலங்குகளின் குட்டி
  • மறி - தடை செய்
  • மரித்தல் - இறத்தல், சாதல்
  • மறித்தல் - தடுத்தல், திரும்புதல், அழித்தல்.
  • மரை - மான்
  • மறை - வேதம் (எ.கா:- அறம் பொருள், இன்பம் வீடு என்கிற நால் வேதங்கள்)
  • மரு - மலை, பாலைநிலம், மணவிருந்து, நீரில்லா இடம், மருக்கொழுந்து
  • மறு - குற்றம், மச்சம், எதிர், வேறு, அடையாளம்
  • மருப்பு - கொம்பு, யானைத் தந்தம், யாழ்த்தண்டு
  • மறுப்பு - எதிர்ப்பு
  • மருகு - வாசனை தாவரம்
  • மறுகு - சிறியதெரு
  • மாரன் - மன்மதன், காமன்
  • மாறன் - பாண்டியன், சடகோபாழ்வார்
  • முரி - பாலைநிலம், நொய், சிதைவு
  • முறி - ஒடி, பத்திரம், தளிர், எழுது, துண்டு
  • முருக்குதல் - அழித்தல், உருக்குதல்
  • முறுக்குதல் - சுழற்றுதல், திரித்தல்
  • வரம் - இறைவன் கொடுப்பது, வேண்டும் பொருள், தெய்வ ஈகை, மேன்மை, விருப்பம்
  • வறம் - வற்றுதல், வறட்சி, பஞ்சம், நீரின்மை, வறுமை, வெம்மை
  • வரவு - வருமானம், வழி
  • வறவு - கஞ்சி
  • வரப்பு - எல்லை, வரம்பு
  • வறப்பு - வறட்சி, வறுமை, வற்றுதல்
  • விரகு - விவேகம், உபாயம், உற்சாகம், புத்தி, கபடம்
  • விறகு - எரிகட்டை
  • விரலி - மஞ்சள்
  • விறலி - மெய்ப்பாடு தோன்ற ஆடிப்பாடும் பெண், 16 வயதினள்
  • விரல் - மனித உடலில் உள்ள உறுப்பு
  • விறல் - பெருமை, வீரம், வெற்றி, மிகுதி, வலி.
  • விராய் - விறகு
  • விறாய் - செருக்கு, இறுமாப்பு
  • வெரு - அச்சம்
  • வெறு - வெறுத்துவிடு
  • வெரல் - மூங்கில்
  • வெறல் - வெல்லுதல், வெற்றி கொள்ளல்
  • விரை - விரைந்துசெல்
  • விறை - மரத்துப்போ(தல்)

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  1. மயங்கொலிச் சொற்கள். தினமணி நாளிதழ். 26 செப்டம்பர் 2012. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. மயங்கொ-ச் சொற்கள். தினமணி நாளிதழ். 9 டிசம்பர் 2012. {{cite book}}: Check date values in: |year= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மயங்கொலிச்_சொற்கள்&oldid=4177549" இலிருந்து மீள்விக்கப்பட்டது